12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை அறிவிப்பு
https://patrikai.com/12th-std-public-exam-hall-ticket-will-available-from-tomorrow-tn-exam-department-notification/
#PublicExam #PlusTwo #Hallticket #TNGovt #Students @[email protected]
சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெளியிட்டார்.‘ அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை...
மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள்! இது பீகார் சம்பவம்.. https://patrikai.com/bihar-admit-cards-show-photos-of-pm-modi-guv-and-dhoni-varsity-orders-probe/ via @[email protected]
பாட்னா: பீகாரின் பிரபலமான மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, மாநில ஆளுநர் பகு சவுகான் போன்றோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலம், பதர்பங்காவில் அமைந்துள்ளது லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அங்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் படத்துக்கு பதிலாக பிரதமர், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட பலரது படங்கள்...
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி… https://patrikai.com/tnpsc-announced-hall-ticket-for-group-2-2a-exam/ via @[email protected]
சென்னை: வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வாளர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கி கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி...
முதுநிலை பொறியியல் படிப்பு: டான்செட் ஹால் டிக்கெட் வெளியானது… https://patrikai.com/anna-university-has-released-tancet-2022-hall-tickets-on-tancet-annauniv-edu/ via @[email protected]
சென்னை: முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் முதுநிலை (PG) பொறியியல் படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ (MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan) படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) க்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மார்ச் 30 முதல் ஏப்ரல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான...
கல்விக் கட்டணத்திற்காக ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை…
https://patrikai.com/do-not-refuse-hall-ticket-department-of-education-warns-private-schools/ via @[email protected]
#private #school #Fees #HallTicket #education @[email protected]
சென்னை: தமிழ்நாட்டில், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், கல்விக் கட்டணத்திற்காக ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு மே 5ந்தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ந்தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதியும் தொடங்க உள்ளன. ஏற்கனவே பிராக்டிக்கல் தேர்வு...