மனிதன் இல்லாத உலகம்
மனிதர்கள் மானுடத்துக்கு எதிராக திரும்புவார்களா, அது எப்படி சாத்தியம்? ஒன்று, சூழியல். இரண்டு, தொழில்நுட்பம்.
சூழியல் சீரழிவு குறித்து கவலை கொள்பவர்கள் அதற்கு மானுடத்தை முக்கிய காரணியாக்குகிறார்கள். பூமியில் மனிதர்கள் இல்லாத உலகு பிற உயிர்களுக்கு வாழ வாய்ப்பளிக்கும் உலகு என்று நம்புகிறார்கள். அதற்காக அவர்கள் மனிதர்களுக்கு விஷம் வைக்கச் சொல்லவில்லை, மானுடம் நீடிக்கவே விரும்புகிறார்கள். ஆனால்
நம்பிக்கை இழந்து விட்டார்கள். பூகோ சொன்னது போல், மனிதன் என்ற கருத்துரு தோன்றியது போலவே ஒரு நாள் முடிவுக்கு வரும், அதன் இடத்தை மானுடம் குறித்த வேறொரு கருத்துரு கைப்பற்றும். இந்த போக்கின் துவக்கமே மானுடத்துக்கு எதிரான கலகம்.
தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் மானுடத்தின் தனி அடையாளங்கள். அவற்றின் காரணமாகவே சூழியல் அக்கறை கொண்டவர்கள் மானுடத்துக்கு எதிராக திரும்புகிறார்கள் என்றால் அதில் நாட்டம் கொண்டவர்கள் புவியில் மானுட உடல் எதிர்கொள்ளும் தடைகளை உடைக்க மானுடம் கடக்கப்பட வேண்டியதாகிறது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உள்ள நம்பிக்கை அதன் வெளிப்பாடு.
இவற்றின் பின்னணி என்ன, இது எங்கே போய் முடியும் என்பதை பார்க்கிறார் ஆடம் கிர்ஷ்.
#kirsch #reading