உன் மௌனம் அடுத்தவர்களுக்கு சந்தோசம் தரும் பட்சத்தில் அமைதியாய் இரு..

ஆனால் ஒரு போதும் ஊமையா இருக்காதே...
#Benafathi

நெருங்கி இருந்தால்
சலித்து விடலாம்..
தூரம் கூட சுகம் தான்!

#Benafathi

எல்லாமுமாக இருந்த எதுவும்..
ஏதோவொரு புள்ளியில்
ஏதுமற்று போகிறது...எல்லாமும்..!

#Benafathi

புன்னகைக்கு காரணம்
கேட்காமல்
பிரதிபலிக்கும் நட்பு.
வரம்

#Benafathi

மிஸ் யூ சொல்வதை கேட்க
நீ இல்லை என்பதே
நிஜத்தில்... மிஸ் யூ
#Benafathi

வேறொன்றும் செய்வதற்கில்லை.. நினைத்துச் சிரிப்பதையோ நினைத்து அழுவதையோ தவிர..!

#Benafathi

எத்தனை வருஷமானால் என்ன.
ஒரேயொரு வார்த்தையே
போதுமானதாக இருக்கிறது
பிரியமானவர்களின் குரல்தானென
அடையாளம் காண...

#Benafathi

நீயும் என்னை மறக்க மாட்ட நானும் உன்னை மறக்க போறதில்லை இயலாமையால் பிரிந்து இருக்க வேண்டிய நிலை

#Benafathi

வலியிலும் வேதனையிலும் வருவது தான் வீரம்..
வாழ்வில் எல்லா நாளும் எல்லாம் நல்ல விதமாக அமைந்து விட்டால் நீ வெறும் கோழையாக தான் இருப்பாய்.
#Benafathi
#Good_Night 💕
நான் தனியாக சிரித்த கணத்தில்
நீயும் இருந்திருப்பாய்..
#Benafathi