#திருவண்ணாமலை தீபத் திருவிழா நாட்களில் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி…
https://patrikai.com/336-people-allowed-to-donate-food-for-22-lakh-people-during-tiruvannamalai-deepa-festival-days/ via @[email protected]
#Tiruvannamalai #deepam #Festivals #Annadanam #FreeFood #food #Distribution
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா பண்டிகையையட்டி, சுமார் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை தீபத்திருவிழா உலக பிரச்சித்தி பெற்றது. 10நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு தீப திருவிழாவையொட்டி சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய (2-ம் நாள்) விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில்...
திருவண்ணாமலை தீபத்திருவிழா: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை https://patrikai.com/tiruvannamalai-deepam-festival-chief-secretary-irai-anbu-confers-with-top-officials/ via @[email protected]
சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவையொட்டி, வரும் 27ந்தேதி கொடியேறுகிறது. 10நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக டிசம்பர் 6-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவில் சுமார் 50லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாக, அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை...
#திருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக பந்த கால் நடப்பட்டது… https://patrikai.com/tiruvannamalai-deepam-festival-bandha-kaal-planted-in-annamalaiyar-temple/ via @[email protected]
திருவண்ணாமலை: பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, இன்று பூர்வாங்க பணிகள் செய்திட இன்று முகூர்த்த பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா அக்டோபர் 27ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இன்று பந்தக்கால் நடும் விழா சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முக்தி ஸ்தலமாவும், அக்னி தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப...