பைபிளில், கீதையில், குரானில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும்.. ஒவ்வொரு வார்த்தையும் உண்மையிலும் உண்மை. ஆனால், நீங்கள் அந்த வார்த்தைகளை தொகுத்து வாக்கியமாக்கிப் படிக்கத் தொடங்கியபோதுதான், நான் என்னை அந்நூல்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
நீங்கள் வாய்திறக்காத போது உங்களை எவரேனும் மடையன் என நினைத்தால் அப்படியே விட்டுவிடுங்கள். கோபப்பட்டு வாய்திறந்து பேசி அதனையே நிறுவிடாதீர்கள்.
கஞ்சா போட்டு வண்டி ஓட்டும் ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களை நான் படைத்திருக்கவே கூடாது. நீங்களும் ஷேர் ஆட்டோவை கண்டுபிடித்திருக்கவே கூடாது.
இந்தியாவில் எவர் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். இங்கே சிக்கலே அதுதான்.
அழித்தல் தொழிலை நானே செய்கிறேன். ஆனாலும் நெகிழி விசயத்தில் நீங்களும் எனைப்போல் ஆகிவிட்டீர்கள்.
எனைப்பற்றிய சச்சரவுகளில், தாமே மடிந்தொழிந்து போகும்படியா நான் உங்களைப் படைத்தேன்?!. உறுதியாய்ச் சொல்கிறேன் ‘கிடையாது’.
@TootOfKadavul
Sometimes God calms the storm, but sometimes God lets the storm rage and calms his child.
கடவுளாடா நீ 😡
@pirathi_Off Oh my child. I can’t always be keen on human stupidity. Next time i send you storm let me notify in advance. Seek resilience. My job entitlement includes Destruction too.
பெருங்கூட்டமாய் உள்ளீர்கள். நீங்கள் அங்கேயே இருங்கள் நரகத்தை அங்கே அனுப்பிவைக்கிறேன்.
பிரபஞ்சத்தை Fediverse ஆக நான் படைத்து 10 சொச்சம் பில்லியன் ஆண்டுகளாகிறது. இன்றுதான் உங்களினத்திற்கு வழி தெரிந்திருக்கிறது.