தூத்துக்குடி மாவட்டம், தெய்வச் செயல்புரம், பொட்டாலூரணி கிராமங்களில் வசிக்கும் 444 விவசாய குடும்பங்கள் 125 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்கள் நிலங்களுக்கு பத்திரம் வைத்துள்ளனர். ஆனால் பட்டா கோரிய போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மோசடி செய்து நிலத்தை அபகரிக்க சமூக விரோத கும்பல்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. விவசாயிகளுக்கு அரணாக நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.
தாக்குதல்களை எதிர்கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து விவசாய மக்களோடு நின்று போராடுகிறது. இன்று, திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுக் கொடுக்கும் போராட்டத்தில் 444 மனுக்கள் தரப்பட்டன.
இப்போராட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றார்கள். #CPIMStruggle#தெய்வச்செயல்புரம்#Tutucorin