'நேர்படப் பேசு'

வேளாண் மண்டலச் சட்டம்… வரலாற்றுச் சாதனையா? கண்துடைப்பா?

முழுவீடியோ: https://youtu.be/LOZ8qJ5f1t4

#ProtectedAgriculturalZone | #ADMK | #DMK
| #NerpadaPesu

Nerpada Pesu: வேளாண் மண்டலச் சட்டம்… வரலாற்றுச் சாதனையா? கண்துடைப்பா? | 20/02/2020

YouTube

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‌அறிவிக்கப்பட்டுள்ளன? அங்கு இனி எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

விவரம்: http://bit.ly/2T0dD3L #ProtectedAgriculturalZone

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்..! - எந்தெந்த திட்டங்களுக்கு அனுமதியில்லை ?

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‌அறிவிக்கப்பட்டுள்ளன? அங்கு இனி எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலத்தில் இடம்பெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்கள் சிறப்பு மண்டலத்திற்குள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்களும் வேளாண் சிறப்பு மண்டலத்திற்குள் வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகள் அமைக்க முடியாது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலைகளையும் இந்தப் பகுதிகளில் இனி அமைக்க முடியாது. செம்பு உருக்காலை, அலுமியம் உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் பதப்படுத்துதல் ஆலைகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைக்க அனுமதியில்லை. தோல் பதனிடுதல், எண்ணெய், நிலக்கரி படுகை, மீத்தேன் ஆலைகளையும் இனி புதிதாக அமைக்க முடியாது. ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயுக்களின் ஆய்வுகள், விவசாயம் அல்லாத பணிகளுக்காக துளையிடுதல், பிரித்தெடுத்தலுக்கும் இனி அனுமதியில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலப்பகுதிகளில் கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும் முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் விவசாயம் அல்லாத தொழில் சார்ந்த புதிய திட்டங்களுக்கு அனுமதி இனி அளிக்கப்படாது என்றாலும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பூவே இளைய பூவே...’ இதயங்களில் இதம் சேர்த்த மலேசியா வாசுதேவனின் நினைவுதினம்...! அதாவது, காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள், திட்டங்கள் பாதிக்கப்படாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், இணைப்புச்சாலை, தொலைத்தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் போன்ற திட்டங்களையும் இந்தச் சட்டம் பாதிக்காது.

திமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது - முதல்வர் பழனிசாமி

#ProtectedAgriculturalZone | #ADMK | #DMK

ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் உருவாகும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

http://bit.ly/2P5OIus

#ProtectedAgriculturalZone | #CMPalanisamy

பழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். காவிரி வேளாண் மண்டல சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் என குழுவில் 30பேர் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவு மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் ஸ்டாலின் பேசுகையில், “வேளாண் நிலங்கள் ரியல் எஸ்டேட் போடப்படுவது ஏன் தடுக்கவில்லை. ஏற்கனவே உள்ள திட்டங்கள் பாதிக்கப்படாது என்று சட்டத்தில் உள்ளது. நடைமுறையிலுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சட்டமுன்வடிவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும். இச்சட்டம் என்பது விவசாயத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும் சட்டமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் இதில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததாக கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். சட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து மிக குறுகிய காலத்தில் இச்சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம். அரசு எடுத்த நடவடிக்கைகளால் வேளாண் தொழில் செழித்துள்ளது. விவசாயிகள் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் சட்டமுன்வடிவு கொண்டு வந்துள்ளோம். வேளாண் பெருமக்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் இச்சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் இதில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை மண்டலத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. கரூர், திருச்சி, அரியலூர் ஒரு சில பகுதிகளை வேளாண் மண்டலத்தில் இணைத்துள்ளோம். இச்சட்டத்திற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகளாக குழுவில் இடம் பெறுவார்கள்” என்றார். இதனையடுத்து, வேளாண் மண்டலம் அறிவிப்பை திமுக வரவேற்கிறது என்று கூறிய ஸ்டாலின், தேர்வுக் குழுவுக்கு அனுப்பினால் முழு வெற்றியை பெறும் என்றும் வலியுறுத்தினார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

#ProtectedAgriculturalZone | #TNAssembly | http://puthiyathalaimurai.com |

Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.

திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

#MKStalin #ProtectedAgriculturalZone

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதா தாக்கல்!

#DeltaRegions #ProtectedAgriculturalZone #TNAssembly

வேளாண் மண்டலம் விவகாரம்: திமுக, அதிமுக இடையே காரசார வாக்குவாதம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Agro-Zone Issue: DMK and AIADMK between debate in TN Assembly

ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழக பட்ஜெட் 2020-21: வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

TN Budget 2020-21: Rs .11894 crore allotted for agriculture

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon