தஞ்சாவூர் திருவிழாவில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் பலியானது தொடர்பாக சட்டப் பேரவையில் ஏப்.27 கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் #CPIM சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை #Tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #TNGovt #TNAssembly #MChinnaduraiMLA
“தஞ்சை மாவட்டத்தில் எதிர்பாராத வகையில் நடந்துள்ள இந்த விபத்தில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். இம்மாதிரியான திருவிழாக்கள் என்பது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது
#VAO கவனமாக செயல்பட்டிருந்தால் இவ்விழப்பை தவிர்த்திருக்க முடியும். இது திடீரென்று நடத்தப்பட்ட திருவிழா அல்ல. ஆண்டுதோறும் நடக்கும் விழா என்ற அடிப்படையில் இப்போது நடத்தியிருக்கிறார்கள். இதுகோடைக் காலம் என்பதால் இதுபோன்ற திருவிழாக்கள் இன்னும் அதிகமாக நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது.
கடந்த 2 ஆண்டாக கொரோன பெருந்தோற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதனால் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை.தற்போது தடை முழுமையாக விலக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் திருவிழாக்களும் வழிபாடுகளும் நடைபெறும் என்பதால் கிராம நிர்வாக மற்றும் உள்ளூர் அளவிலான அதிகாரிகளும் மிக கவனமாக செயல்பட வேண்டும்.