"உலகம் முழுவதும், அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நாங்கள் சொல்லும் செய்தி இதுதான்: வேலையைவிட்டு நின்றதெல்லாம் போதும்; ஒன்றுபடுங்கள். #ALU #AmazonLabourUnion #ChristianSmalls @[email protected]
உங்களால் செய்ய முடிந்த மிக எளிய, சிறிய செயல் இது. 'உனக்கு வேலை பிடிக்காவிட்டால், வேலையை விட்டுவிடு' என்று எல்லோரும் சொல்வார்கள். நல்லது, அடுப்பிலிருந்து தப்பி நெருப்பில் குதிப்பதுதான் நடக்கும். அதை நாம் நிறுத்திக் கொள்ளலாம், அதனால் எதுவும் மாறாது.
நடைமுறையில் இருக்கும் சமூக அமைப்பு தொடரும் வரை சிரமங்கள் தொடரும். இப்போது நாங்கள் ஒரு விசயத்தை நிரூபித்துவிட்டோம். நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயல்படலாம், எந்த கார்ப்பரேட் நிறுவனத்திலும் இயங்கலாம், உங்களால் ஒன்றுபட முடியும்.
அமேசானில் நாங்கள் சங்கம் ஏற்படுத்திவிட்டோம். இது எங்களுக்கு சாத்தியமாகிவிட்டது. அப்படியானால் சங்கமாக இணைவது எங்குமே சாத்தியம்தான்.
எனக்கு ஏராளமான மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. ஆம், நாங்கள் எதுவும் செய்ய தயாராக உள்ளோம், எந்த ஆலோசனையும் வழங்க தயாராக உள்ளோம், உங்களுக்கு அருகிலேயே இருக்கிறோம். எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பில் இருங்கள், ஆதரவு கொடுங்கள்.

நியூயார்க் பகுதியில் நீங்கள் வசிப்பதாக இருந்தால் தன்னார்வளர்களாக உடன் வாருங்கள், நிதியளித்திடுங்கள். இன்னொருமுறை சொல்கிறேன்.

நாம்தான் வேர். சக மனிதர்களை பாதுகாக்க முயற்சிக்கும் சாதாரண மனிதர்களே நாம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே நாம் சங்கமாக சேர்கிறோம்.

ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் ஈடுபட அழைக்கிறேன்" - கிரிஸ்டியன் ஸ்மால்ஸ், தலைவர், அமேசான் தொழிலாளர்கள் சங்கம் #ALU #AmazonLabourUnion #ChristianSmalls