
செக் மோசடி வழக்கு இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பி.வி.பி. நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
www.patrikai.com
லிங்குசாமி படத்தில் வில்லனாக களமிறக்கும் மாதவன்….!
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கடும் பின்னடைவை சந்தித்தது இப்படம், இரண்டு வருடங்களுக்கு பின் தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மாதவனை படக்குழு அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை...
patrikai.com
கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி….!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon