ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 20பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் https://patrikai.com/tourist-van-overturned-on-yercaud-mountain-road-20-people-luckily-survived/ via @[email protected]
சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சேலம் அழகாபுரம் பகுதியில் ஸ்வீட் கார்ன் ஏற்றுமதி செய்துவருபவர் சரவணன். இவருடைய மனைவி சங்கீதா மற்றும் 20 பெண்கள் ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சுப்பிரமணிக்கு சொந்தமான வேனில் ஏற்காட்டிற்கு புறப்பட்டனர். வேனை, அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்...
மலைப்பகுதியில் பைக்கில் சென்றவர்கள் மீது பாறை உருண்டு விழுந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ… https://patrikai.com/biker-killed-after-a-rock-falls-on-the-bike-at-thamarassery-ghat-road-video/ via @[email protected]
#Thamarassery #GhatRoad #HillRide #BIKERS #Kerala #ViralVideo #Video
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 3 பைக்குகளில் 'ஹில் ரைட்' சென்றனர். இதில் அபினவ் (20) மற்றும் அனீஷ் (26) ஆகியோர் சென்ற பைக் மீது ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே 250 மீட்டர் உயரத்தில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியது. பாறை மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தடுப்புச் சுவரைத் தாண்டி பள்ளத்தில் விழுந்தனர், இதில் அபினவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....