Inside Delhi: beaten, lynched and burnt alive

➖ @guardiannews
https://t.co/ODfZP5aJmc
#DelhiRiot2020

Inside Delhi: beaten, lynched and burnt alive

After riots left more than 40 dead in the Indian capital, we visit homes and hospitals to examine the consequences of the religious hatred stoked by a nationalist government

‘அக்னிப் பரீட்சை’

உளவுத்துறை தோல்வி என்றால் அதிகாரிகள் மட்டும் காரணமா?- தொல்.திருமாவளவன் கேள்வி

இன்று இரவு 7 மணிக்கு | #AgniParitchai #Thirumavalavan #DelhiRiot2020

@[email protected]:New York City stands with Delhi ✊🏾 #DelhiRiot2020 #IndiaAgainstCAA @EqualityLabs
rax city bitch on Twitter

“New York City stands with Delhi ✊🏾 #DelhiRiot2020 #IndiaAgainstCAA @EqualityLabs”

Twitter

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட, ஒரு பள்ளிக் கூடம் கட்டுவதே சிறந்தது என அறிஞர்கள் கூறுவர். ஆனால் ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ஒரு பள்ளியை சின்னாபின்னமாக்கி இருக்கிறது டெல்லியில் நடந்த வன்முறை.

http://bit.ly/2T76wrt #DelhiViolance #DelhiRiot2020

டெல்லி வன்முறையால் உருக்குலைந்த பள்ளிக்கூடம்

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட, ஒரு பள்ளிக் கூடம் கட்டுவதே சிறந்தது என அறிஞர்கள் கூறுவர். ஆனால் ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ஒரு பள்ளியை சின்னாபின்னமாக்கி இருக்கிறது டெல்லியில் நடந்த வன்முறை. தீக்கிரையான புத்தகங்கள், கரித்துண்டுகளாக காட்சி தரும் கணினிகள், எழுத்தறிவு புகட்டும் கரும்பலகையிலும் கரும்புகை. இப்படி போர் பாதித்த பகுதி போல காட்சித் தரும் இந்தக் கட்டடம், இளம் பிஞ்சுகளின் க‌ல்விக் கண் திறக்கும் தனியார் பள்ளிக்கூடம். டெல்லி ப்ரிஜ்ஜிபூர் பகுதியில் இயங்கி வந்த இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. 800 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5 மணி ‌அளவில் புகுந்த வன்முறை வெறியாட்ட கும்பல், கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தது. டெல்லி வன்முறையில் இரண்டாயிரம் கிலோ உடைந்த செங்கற்கள்  பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஹால் டிக்கெட்டுகள், 1987 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட வந்த மாணவர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது அந்த கும்பல். இருண்டு கிடக்கும் உள்ளத்தில் அறிவு என்னும் விளக்கேற்றும் கரும்பலகையையும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் மேஜை நாற்காலிகளையும் கூட அந்த கும்பல் விட்டு வைக்கவில்லை. நெஞ்சை உலுக்கும் வன்முறை புகைப்படங்கள்: வாழ முடியாத இடமாகிறதா டெல்லி?  பள்ளியில் இருந்த கணினிகள், பள்ளிப் பேருந்து, ஆசிரியர்களின் வாகனங்கள் என அனைத்தையும் தீக்கிரையாக்கிவிட்டு சென்றிருக்கிறது வன்முறை கும்பல். அறிவைத் தீட்டும் பள்ளிக்குள், தீட்டிய ஆயுதங்கள் ஏந்தி வந்த அந்த கும்பல் நடத்திய வெறியாட்டத்தினால் ஒட்டுமொத்த பள்ளியே வெறும் கூடாக காட்சியளிக்கிறது. மாணவர்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டிருப்பதால், அவர்களது எதிர்கால வாழ்வே தற்போது கேள்விகுறியாகி இருக்கிறது.

டெல்லியில் வன்முறை சூழலுக்கு நடுவே இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது

http://bit.ly/32xSYsh

#DelhiRiot2020 #Muslim #marriage

வெளியே வன்முறை வெறியாட்டம்.. வீட்டிற்குள்ளே இஸ்லாமியரை கரம் பிடித்த இந்துப் பெண்..!

டெல்லியில் வன்முறை சூழலுக்கு நடுவே இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெருவெங்கும் ஒரே கலவரம்.. மக்களின் அச்சம் கலந்த பயங்கரமான அலறல்கள்.. தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகளின் ஆங்கார குரல்கள்... ஒரு போர்க்களத்தை ஒத்த காட்சிகள் வெளியே அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், கைகளில் மருதாணி அலங்காரங்களுடன், முகத்தில் மஞ்சள் நிறைய திருமணக் கோலத்தில் பெண் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்க வீட்டிற்குள் காத்திருந்தாள்.         டெல்லி வன்முறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கவலை  ஆம், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சாவித்ரி பிரசாத்திற்கு கடந்த 24-ஆம் தேதி திருமணம். அதுவும், இஸ்லாமிய இளைஞர் உடன் திருமணம். அண்டை வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமிய இளைஞருடன்தான் சாவித்ரிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ட்ரம்ப் வருகையின் முதல் நாளிலே வன்முறை சம்பவங்கள் தொடங்கிவிட்டன. கட்டுப்படுத்த முடியாமல் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்ததால், திருமணம் ஒத்திவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. கிழக்கு டெல்லி முழுவதும் மறுநாள் செவ்வாய்கிழமையும்(பிப்.25) வன்முறை தாண்டவமாடியது. ஆனால், வன்முறை சம்பவங்கள் சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்திலும் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் சாவித்ரியின் தந்தை. இஸ்லாமிய சகோதரர்கள் எங்களுடன் துணை இருக்க திருமணம் நடத்துவதில் எவ்வித அச்சமும் இல்லை என சாவித்ரியின் தந்தை பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். “இஸ்லாமிய சகோதரர்கள் தனக்கு பாதுகாப்பு அளித்தனர்” என்று மணப்பெண் சாவித்ரி பிரசாத் ராய்ட்டர்ஸ் செய்திக் குழுவினருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இடவசதி குறைவாக உள்ள சாவித்ரியின் இல்லத்தில்தான் இந்த திருமண நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது.        டெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்  திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆமிர் மாலிக் என்பவர் கூறுகையில், “எங்களுடைய இந்து சகோதரர்களுடன் நாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அவர்களுக்காக எதையும் செய்வோம். அதுபோலத்தான் தற்போது அவர்களுக்காக இங்கு இருக்கிறோம்” என்றார். மணப்பெண்ணின் தந்தை போத்தே, “வன்முறை சம்பவங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது. நாங்கள் அமைதியை விரும்பினோம். வன்முறைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் எங்கள் வீடுகளுக்கு அருகில் இருந்தவர்கள் கிடையாது. இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே எவ்வித விரோதமும் கிடையாது” என்று கூறினார். அத்துடன், “இன்று என்னுடைய மகளின் திருமண நிகழ்ச்சியில் எங்களது உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், எங்களுடைய இஸ்லாமிய அண்டை வீட்டார்கள், சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களும் எங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்” என்றும் அவர் நெகிழ்ச்சியாக கூறினார்.               டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு  டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுக்கு நடுவேயும் இஸ்லாமிய, இந்து சகோதரர்கள் தங்களது ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்களுக்கு இந்து சகோதரர்கள் தங்களது வீடுகளில் அடைக்கலம் கொடுத்தார்கள். உணவு கொடுத்தார்கள். மதத்தை வைத்து சிலர் ஆதாயம் அடைய நினைத்தாலும் இந்துக்களும், இஸ்லாமியர்களுடன் சகோதரத்துடன் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த திருமணமும் ஒரு சான்றுதான்.

#PTExclusive

டெல்லியில் நடந்த வன்முறையால் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளியின் நிலை! | #DelhiViolance #DelhiRiot2020

From walking alongside the #rioters to simply watch people getting stabbed to death, there is little doubt that the #DelhiPolice officers did not do what they were supposed to — protect all #citizens. #DelhiRiot2020 #DelhiViolence #DelhiRiotTruth
https://zurl.co/5JNw
Delhi violence: As night falls, sleep fades as fear grips residents - The Federal

For the last couple of days, the riots in Delhi seem to have subsided. But have they ended? Even if they have, following the outrage from civil society, courts and intervention from Prime Minister Narendra Modi, the mood among the affected communities is still gloomy. Many are fearful of another round of attack. The street view looks far from normal.

டெல்லி வன்முறை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணை‌ய தலைவர் மிச்செல் பேக்லெட் தெரிவித்துள்ளார்

http://bit.ly/2VxJb3R

#DelhiRiot2020 #UNChief

டெல்லி வன்முறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கவலை

டெல்லி வன்முறை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணை‌ய தலைவர் மிச்செல் பேக்லெட் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த திங்களன்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன. டெல்லியில் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கலவர பூமியாக காட்சியளித்த அந்நகரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. குண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல் இந்நிலையில், டெல்லி வன்முறை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணை‌ய தலைவர் மிச்செல் பேக்லெட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் நீண்டகால பாரம்பரியமான மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். டெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல் டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை எனவும், அமைதியாக போராடியவர்கள் மீது பலப்பிரயோகம் நடத்தியதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். மேற்கொண்டு வன்முறைகள் நிகழா வண்ணம் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் தலைவர்களை மிச்செல் பேக்லெட் கேட்டுக்கொண்டுள்ளார்.  

டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தவா நியமனம்!

#SNSrivastava #DelhiRiot2020 #MHA #PoliceCommissioner

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon