‘தீரன்’, ‘தலைநகரம்’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் போஸ் வெங்கட். சாதி ஒழிப்பு, ஆணவக்கொலை குறித்து போஸ் வெங்கட் கன்னிமாடம் மூலம் பேசியதை பலரும் பாராட்டினர்.

http://bit.ly/2TMPNtT | #BoseVenkat | #Theeran

உறியடி ஹீரோவை வைத்து படம் இயக்கும் போஸ் வெங்கட்...!

‘தீரன்’, ‘தலைநகரம்’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் போஸ் வெங்கட். என்னதான் இருந்தாலும் வெள்ளித் திரையைவிட சின்னத் திரையில் ஒளிபரப்பான மெட்டி ஒலிதான் போஸ் வெங்கட்டிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. நீண்ட நாட்களாக நடிகராக இருந்து வந்த இவர் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் ‘கன்னிமாடம்’. துவக்கத்தில் யாராலும் கவனிக்கப்படாத இத்திரைப்படம் ஸ்லோ பிக் அப் ஆனது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சாதி ஒழிப்பு, ஆணவக்கொலை குறித்து போஸ் வெங்கட் கன்னிமாடம் மூலம் பேசியதை பலரும் பாராட்டினர். இந்நிலையில் போஸ் வெங்கட் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். ஆமாம் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ தயாரிக்கும் அப்படத்தில் ஹீரோவாக விஜய்குமார் நடிக்கிறார். உறியடி திரைப்படத்தை நடித்து இயக்கிய விஜய்குமார் தான் போஸ் வெங்கட்டின் அடுத்த பட ஹீரோ. இப்படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகத் தெரிகிறது. உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னிமாடம் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இருக்கும் போஸ் வெங்கட் தற்போது தனது அடுத்த படத்தின் முன்தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

Exclusive:

தலஅஜித்சார் கூட இன்னும் நான் நடிக்கல.வேதாளம்&விஸ்வாசம் படம் கடைசிநேரத்துல Miss ஆயிடுச்சி.But கண்டிப்பாக அஜித்சார் கூட நடித்திடுவேன் அதில் எந்த மாற்றமும் இல்லை.

-Actor #BoseVenkat

#Viswasam #Valimai
#THALAFansDominatingMastodon