Nerves are getting into Aussies. NZ is calm & riding on the mindset set by Kane Williamson for his team.
They look like a better team in this inning.
ரசிகர்கள் இல்லாததால் சிக்ஸர்களாக கேலரிக்கு விரட்டப்படும் பந்துகளை, நியூசிலாந்து வீரர்களே பல நாற்காலிகளை தாண்டிச் சென்று எடுத்து வருகின்றனர். |
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரசிகர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்ப்பெற்ற சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடைபெறுவதால் கேலரிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நடக்குமா ஐபிஎல் போட்டிகள் ? அணிகளின் உரிமையாளர்களுக்கு அழைப்பு உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அண்மையில் தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அதிரடியாக விளையாடி வருகிறது. Good arm, Lockie! #AUSvNZ pic.twitter.com/xY7QtF5UGf — cricket.com.au (@cricketcomau) March 13, 2020 ரசிகர்கள் இல்லாததால் சிக்ஸர்களாக கேலரிக்கு விரட்டப்படும் பந்துகளை, நியூசிலாந்து வீரர்களே சென்று எடுத்து வருகின்றனர். இதில் ஆரோன் ஃபின்ச் அடித்த சிக்ஸர் ஒன்று கேலரிக்குள் வீழ்ந்தது. அந்த பந்தை நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட்சன் பல நாற்காலிகளை தாண்டிச் சென்று எடுத்து வந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த பலர் "ரசிகர்கள் இல்லாத நாள் கஷ்டம்தான்" என்றும், "ஆளே இல்லாத கடையில யாருக்குபா டீ ஆத்துறீங்க" என கிண்டலடித்து வருகின்றனர். ரசிகர்கள் இல்லாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது ஒரு நாள் போட்டியும், அதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டியும் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் எரிந்துவரும் காட்டுத்தீயை அணைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவில் எரிந்துவரும் காட்டுத்தீயை அணைக்கவும், பாதிக்கப்பட்டவர்களு‌க்கு உதவிடவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சு‌மார் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென அந்நாட்டு பந்துவீச்சாளர்கள் அறிவித்துள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின், தான் பிக் பேஷ் லீக் தொடரில் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் ‌வழங்குவதாக தெரிவித்துள்ளார். பிக் பேஷ் லீக்கில் விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் FAWAD AHMED, தான் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் மற்றும் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இதேபோல, ஆஸ்திரேலிய வீரர்கள்‌ பீட்டர் சிடில், ஆடம் ஸாம்பா, கனே ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் பிக் பேஷ் லீக்கில் தாங்கள் வீழ்த்தும் விக்கெட்டுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு அரசு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.