தமிழக அரசு 25% தூர்வாரியதற்கு மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் 3% உயர்ந்துள்ளது.
கும்பகோணம் வட்டம்,27உள்ளூர் ஊராட்சி வாய்க்கால்களை தூர்வார 2013முதல் கிராமசபாவில் 22முறை கோரிக்கை வைத்து அயர்ந்துவிட்டேன்.
தஞ்சை புதியஆட்சியர் திரு.கோவிந்தராவ் அவர்கட்கு இறுதியாக ஒரு கோரிக்கையை அனுப்பிட உள்ளேன்.
கிட்டதட்ட15 ஆண்டுகளாக (2004) எங்கள் பகுதி பாசன வாய்க்கால் தூர் வாராது ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு மழைநீரானது குப்பைக்கூளங்களில் கலந்து சாக்கடையாக மாறி கொசுக்களை உற்பத்தி செய்வது மட்டுமே இங்கு நடக்கிறது.
இங்கே அரசியல்வாதிகள் ஊராட்சி மன்றத்தேர்தலில் வாக்குகளை மட்டும் கேட்க வருவார்கள் மக்களும் எந்தவித கோரிக்கையுமின்றி பணத்திற்கு வாக்குகளை விற்பார்கள்.