வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.
யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.
பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின் பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!