பலமொழி போற்றல் பிழையில்லை ஆயினும்
தாய்மொழி தூற்றல் கொடிது.
1
பலமொழி போற்றல் பிழையில்லை ஆயினும்
தாய்மொழி தூற்றல் கொடிது.
1
சாதிதனைப் பாராது நட்பு பிரிவினை
நோக்கினி லாகாது நட்பு.
2
பணிவாழ் விடந்தந்து நன்னட்பு மீந்த
இனிதான சென்னை நகர்.
3
ஏகலை வன்விரல் கேட்டதர்ம மின்று
தரமிலை என்றீந்த நீட்.
4
நற்றமிழ்ச் சொல்லிருக்க ஏன்வடச் சொல்லஃது
நல்லுடல் கெடுக்கும் ஒட்டு.
5
வங்கிக்கும் பேசிக்கும் கேட்பார்நம் ஆதார்
தனியுரிமை போற்றா தார்.
6
பூவின் நிலைகள் பனிரெண்டிற் கும்பெயர்
கூறி மகிழும் தமிழ்.
7
அரும்பு, நனை, முகை, மொக்குள், போது, முகிழ், மலர், அலர், பொதும்பர், வீ, பொம்மல், செம்மலர்
பிழைகள் தவிர்த்தெ ழுதுக எழுத்துப்
பிழைகள் எனல்பிழை யாம்.
8
கடவுளின் பேரால் கலவரம் தீததிலும்
தீதுமக்கள் காவா தரசு.
9
குடிசைகள் தன்னை எரித்தது தீயன்று
உள்ளத் தெரியுஞ்சா தீ.
10
உண்மை யறிய முனையா ரவர்மனக்
கட்டமைவு வீழவிரும் பார்.
11
மாலை வெயில்வா னெனவுன் எழில்மிகு
பூப்புன் நகைவெட் கமே.
12
விரல்வழிக் காணா எழில்கண் டிடுவார்
விழிவழிக் காணா தவர்.
13
ஏரியில் வீடுகட்டி ஆறிரண்டை மாசாக்கி
மாரியில்தள் ளாடும் நகர்.
14
தாய்மொழிக் கல்லார் பயனில என்றிடு
வார்வாழ் வறியாப் பதர்.
15
சிகரம் விழுபவன் கைப்பற்றி காத்தல்போல்
நேரக் குருதிக் கொடை.
16
மகிழ்வு இனிமை நகைமூன்றும் வசிக்கும்
மனது இளமையோடென் றும்.
17
நாடே வரிசையில் நின்றது காரணம்
நாட்டெல் லையிலே படை.
18
ஊருக்கு அப்புறம் சேரி மனத்தோடு
ஊறிய சாதி அழுக்கு.
19
அயர்ச்சி தனில்வீ ழலியல்பு மீண்டும்
முயற்சி கொளல்மீச் சிறப்பு.
20
சொல்லும் கருத்தை விடச்சொன் னதுயார்
எனநோக்கும் விந்தை யுலகு.
21
உரிமம் வினவுபவர் கண்டு பயமில்
மிதிவண்டி ஓட்டு பவர்க்கு.
22
இளமையில் கல்லென சொன்னவூரின் நன்கு
படித்தவளைக் கொன்றது நீட்.
23
குறைதிருத்தி வாழ்வினிக்க நேர்வழிச் சேர்ந்த
நிறைவாழ்வு ஆசான்கொ டை.
24
கனவினைக் கொன்றாய் கருத்தினைக் கொன்றாய்
விளைவுகள் கொல்லும் உனை.
25
பசிக்கனவு தேடு இலட்சந் தரின்நல்
பயில்மன் றமுந்தரும் நாடு.
26
துயரிலா வாழ்வென் றுமினித் திடாதுயர்
நன்மை உறுத்தும் வழி.
27