நவம்பர் 1 தமிழ்நாடு உதயமான தினம்!

அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம்!
மொழிவழி மாநில கட்டமைப்பைப் பாதுகாப்போம்!
மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை பெற போராடுவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) #LinguisticStates #CommunistProtest

மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கும், அனைத்து மொழிகளும் சமச்சீராக வளர்ச்சி அடையும், இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி, 1946 தேர்தலில் முதன் முதலாக ஒன்றுபட்ட தமிழ்நாட்டுக்கான முழக்கத்தை முன்வைத்தது. மொழி வழி மாநிலங்கள் அமைவதற்காக நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த போராட்டமே தமிழ்நாடு அமைவதையும் சாத்தியமாக்கியது.
தமிழ்நாடு அமைவதற்கு முன்பே சட்டமன்றத்தில் தமிழில் பேசி வரலாறு படைத்தது கம்யூனிஸ்ட் கட்சி, 1952 நவம்பர் 3 ஆம் தேதியன்று அப்போதைய மெட்ராஸ் ராஜ்ஜியத்தின் சட்டசபையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவரவர் தாய் மொழியில் விவாதிக்கவும், கேள்விகளை எழுப்பவும் தொடங்கினார்கள்.