புத்தர் கூறியது:
நான் உங்கள் நண்பன்,,

எல்லா பெரிய மதத் தலைவர்களும் புத்தரோடு ஒப்பிடும் போது தாழ்ந்து போனவர்களே

எல்லா மதத் தலைவர்களும் உங்களை சீடர்களாகவும், அவர்கள் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும், கண்டிப்புக்கும், பயிற்சியின் வாழ்க்கை முறைக்கும் கட்டுப்பட வேண்டும் என்று விரும்பினார்கள்.

உங்களை ஒரு பொம்மையாக மாற்றி அழகான சிறையில் அடைப்பவர்களாகவே இருந்தார்கள்.

ஆனால் புத்தர் இவற்றிலிருந்து மாறுபட்டார். சுதந்திரம் என்ற தென்றலை சுவாசிக்க சொன்னார்.

சுதந்திரம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ்வின் மாபெரும் அதிசயத்தை உணர முடியாது. கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அவன் தன் சிறகுகளை விரித்து வானில் ஒரு எல்லைக்கு மேல் பறக்கமுடியாது என்று உணர்த்தினார்.

ஒவ்வொரு மதமும் தன் கட்டுப்பாடுகளால் மனிதனை சங்கலியிட்டு அவர்கள் யார் என்ற உண்மையை அறிய விடாமல் அவர்களுக்கு மதம் என்ற முகமூடியை மாட்டி, மதக் கல்வியும் புகட்டி அஞ்ஞானத்தை வளர்த்தது.

ஆனால் புத்தர் மதசம்பந்தமான எந்த கல்வியையும் அளிக்கவில்லை.

எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நீங்களாக இருங்கள் என்றார்.

அதுதான் உன்மதம்,, நீ நீயாக இரு.

இது போன்ற சுதந்திரத்தை யாரும் அப்போது அனுபவிக்கவில்லை.

இந்த மனிதத் தன்மையை அதுவரையில் யாரும் சுவாசிக்கவில்லை.

அவர் யாரையும் தன் சீடர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொண்டால் அது அவருடைய புனிதத் தன்மையை அழித்து விடும் என்று எண்ணினார்.

அவர் எல்லோரையும் தன் சக பயணியாக -fellow travellers ஆக மதித்தார்.

அவர் இறக்கும் தருவாயில் சொன்னது:
நான் மீண்டும் வந்தால், உங்கள் நண்பனாகவே வருவேன்,,, என்றார்..