RE: https://bsky.app/profile/did:plc:7qqkq2zdwq4j5jingukgtuky/post/3m6asivj74c2u
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட நிலமோசடி வழக்கு ரத்து! https://patrikai.com/chennai-high-court-cancelled-former-minister-jayakumar-against-assets-case/ via @[email protected]
இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது குறித்து ஜெயக்குமார் ஆவேசம்…
https://patrikai.com/i-will-not-be-afraid-of-all-this-jayakumar-angry-about-ops-supporters-siege/ via @[email protected]
#Jayakumar #AIADMK #ADMK #ADMKpoliticalCrisis @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சரும், எடப்பாடியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார். மேலும் ஒற்றை தலைமை குறித்து நான் பேசியது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை என்றும் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால், இபிஎஸ், ஓபிஎஸ் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இருவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
நிலம் உரிமை தொடர்பான வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் https://patrikai.com/jayakumars-daughter-should-not-be-arrested-in-land-ownership-case-high-court/ via @[email protected]
#Jayakumar #DJayakumar #Land #ChennaiHighCourt #HighCourt @[email protected]
சென்னை: நிலம் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளை கைது செய்ய உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து, இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் கடந்த...
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/chennai-high-court-granted-bail-to-former-minister-jayakumar-in-land-grab-case/ via @[email protected]
#Jayakumar #AIADMK #Bail #chennaihighcourt #highcourt @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின்படி, திருச்சியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று., சென்னை ராயபுரத்தில், கள்ள ஓட்டுப் போட முயன்றதாக, திமுக நபர் நரேஷ் என்பதை பிடித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில்,அவரது சட்டையை கழற்றி, சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயகுமார்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!
https://patrikai.com/former-minister-jayakumars-bail-petition-postponement/ via @[email protected]
#DJayakumar #Jayakumar #Bail #highcourt #chennaihighcourt @[email protected] @[email protected]
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கொடுத்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக ...
புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஓபிஎஸ் சந்திப்பு.. https://patrikai.com/ops-meets-former-minister-jayakumar-in-puzhal-jail/ via @[email protected]
#Puzhal #Jayakumar #OPS @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: அடுத்தடுத்த வழக்குகளால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மற்றும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இன்று சந்தித்து பேசினார். இந்த பேச்சு சுமார் 35 நிமிடம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வழக்கில் மட்டுமே ஜாமின் கிடைத்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத வகையில், காவல்துறை அடுத்தடுத்து வழக்குகளை போட்டு...
ஜெயக்குமார் கைது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்… https://patrikai.com/jayakumar-arrested-aiadmk-protests-today-in-district-capitals-across-tamil-nadu/ via @[email protected]
#Jayakumar #DJayakumar #AIADMK #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (பிப்.28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட முயன்ற கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அரை நிர்வாணமாக இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது மனித உரிமை...
நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டி தழுவிய காட்சி! வீடியோ
https://patrikai.com/aiadmk-former-ministers-and-executives-embracing-former-minister-jayakumar-who-came-to-the-court-video/ via @[email protected]
#Jayakumar #HighCourt #chennaihighcourt @[email protected] @[email protected]
சென்னை: ஜாமின் மனு மீதான விசாரணைக்காக நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கட்டி தழுவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 19ந்தேதி கள்ளஓட்டுப் போட வந்த தி.மு.க. உறுப்பினர் நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சிறையில் இருந்து,...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு! https://patrikai.com/former-minister-jayakumar-bail-petition-case-postponed/ via @[email protected]
சென்னை: இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக தொடரப்பட்ட ஜாமின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ளஓட்டு போடச்சென்ற திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து தாக்கியதுடன், அவரை அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10...