
31/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,956 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2-ம் நாளாக 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 வயதிற்குப்பட்ட 18 பேர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
30/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 97 பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை -32) உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,78,178 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று உச்சபட்சமாக 4,328பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இன்று ஒரே நாளில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதத்திற்குள் உற்பத்தி மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய் வரை இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
http://bit.ly/2veVOGe #CoronaImpact
கொரோனா தாக்கம்: பாதிப்பை சந்திக்கும் மொபைல் போன் உற்பத்தியாளர்கள்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதத்திற்குள் உற்பத்தி மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய் வரை இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும்‌ பெரும்பாலான மொபைல் போன்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரோனா காரணமாக சீனாவில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டிருந்ததால், இந்திய நிறுவனங்கள் கடந்த 10 நாட்களாக சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
கொரோனா பரவல் எதிரொலி: எவரெஸ்ட் சிகரப் பயணத்திற்கு தடை விதித்தது நேபாளம்..!
சீனாவில் தற்போது செல்போன் உதிரிபாக நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளதால் ஏப்ரல்‌ மாத இறுதிக்குள் நிலைமை சீராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உற்பத்தி தடை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 சதவிகிதம் வரை உற்பத்தி மதிப்பில் பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை தவிருங்கள்”- கோயில் நிர்வாகங்கள் வேண்டுகோள்..!
குறிப்பாக, உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் 3,500 கோடி ரூபாய் வரையிலும், ஏப்ரல் மாதத்தில் 2,500 கோடி ரூபாய் வரையிலும்‌ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனவே கடுமையான பாதிப்பிலிருந்து உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும்‌ என இ‌ந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.