உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு

*வாகனங்களுக்கு தீ வைப்பு, பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிப்பு http://bit.ly/2Z9viIQ

| #CitizenshipAmmendmentAct | #UPProtest

உத்தரப்பிரதேசம் கலவரம்: 6 பேர் உயிரிழப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறை வெடித்தது. போராட்டத்தின் போது 6 பேர் உயிரிழந்திருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர், கண்டாநகர், ஷமாரூஃப், கூனிப்பூர், இஸ்மெயில் பூர் பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கோரக்பூரில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள், திடீரென பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரை நோக்கி கற்களை வீசப்பட்டன. வாகனங்கள் நொறுக்கப்பட்டன. காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது. புலந்த்சாகரில் நடந்த போராட்டமும் வன்முறையில் முடிந்தது. கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. முசாஃபர்நகரில் 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. லக்னோவில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கும் காவல்துறையினர், இணையதள சேவைகளை தற்காலிகமாக முடக்கியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். பதற்றம் நிலவும் பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச கலவரம் முதல் ஜார்கண்ட் தேர்தல் வரை http://bit.ly/35I5XZ2

#PTTopNews | #UPProtest | #JharkhandElection

TopNews | உத்தரப்பிரதேச கலவரம் முதல் ஜார்கண்ட் தேர்தல் வரை

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் 6 பேர் உயிரிழப்பு.வாகனங்கள் தீ வைத்து எரிப்பு.பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிப்பு. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவிலும் நீடித்த போராட்டம். இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு. குடியுரிமையை நிரூபிக்க சொல்லி யாரும் துன்புறுத்தப்படமாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் விளக்கம். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் என்றும் அழைப்பு தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை. போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு சீர்திருத்தங்களை கொண்டுவரும் போது எதிர்ப்புகள் எழுவுவதாக பிரதமர் மோடி கருத்து.மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தல். ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல். தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை. 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்.