திமுக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை
http://bit.ly/2uFS2oZ #PTTopNewsதிமுக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. இன்று மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை.
நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம். போராட்டங்கள் தொடரும் நிலையில் அரசிதழில் வெளியீடு.
ஜேஎன்யூ தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோ‌ஷ்-க்கு தொடர்பு என காவல்துறை குற்றச்சாட்டு.
உத்தரபிரதேசத்தில் லாரி மீது மோதியதில் பற்றி எரிந்தது பேருந்து. தீயில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு.20க்கும் மேற்பட்டோர் காயம்.
இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. புனேவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வாட்டி வதைக்கும் குளிர்... - இன்னும் சில முக்கியச் செய்திகள்!
http://bit.ly/2Q7IF9F |
#PTTopNews |
#LocalBodyElectionsஊரக உள்ளாட்சித் தேர்தல்; வாட்டி வதைக்கும் குளிர்... - இன்னும் சில முக்கியச் செய்திகள்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் இன்று 2-ம் கட்டத் தேர்தல். மலை கிராமங்களுக்கு குதிரை மற்றும் கழுதை மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு. இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையில் குடியுரிமை சட்டத்தை கோலமிட்டு நூதன முறையில் எதிர்த்த 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு. கோலத்தில் சொன்ன கருத்துகள் அலங்கோலமாக இருந்ததால் நடவடிக்கை என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்
தலைமை தளபதியின் வயது வரம்பை நிர்ணயம் செய்தது மத்திய அரசு. ராணுவ தளபதி பிபின் ராவத்தே தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் எனத் தகவல்
மகர விளக்கு மகா உற்சவத்துக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில். ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறுகிறது மகர விளக்கு பூஜை
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர். மூன்று நாட்களுக்கு அடர்ந்த மூடுபனி நிலவும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு
நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கி கவுரவம். நாட்டின் உயரிய திரைத்துறை விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பெண்களுக்கான உலக அதிவேக செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன். ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி மகுடம் சூடினார்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை ‌கட்டுப்பாடு
ஊரக உள்ளாட்சி தேர்தல்; சபரிமலை கோயில் அடைப்பு... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
http://bit.ly/2ZALEdR |
#PTTopNews |
#LocalBodyElections |
#SabarimalaTempleTopNews | ஊரக உள்ளாட்சி தேர்தல்; சபரிமலை கோயில் அடைப்பு... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குகள் பதிவு. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்
உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை. வாக்குப் பெட்டிகளுக்கு தீவைப்பு. காவல்துறையினர் தடியடி. திருடப்பட்ட வாக்குப்பெட்டி மீட்பு
வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு. தேர்தல் முடிவுகளை நிறுத்திவைக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொது நல மனு
2ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் மாலையுடன் ஓய்கிறது பரப்புரை. 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை மறுநாள் வாக்குப் பதிவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை. கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் போராட்டம். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான சட்டப் பிரிவை சுட்டிக்காட்டத் தயாரா? ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால்
மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை கோயில் அடைப்பு. 41 நாட்களில் 157 கோடி ரூபாய் காணிக்கை செலுத்திய பக்தர்கள்
காங்கிரஸ் கட்சியின் 135ஆவது ஆண்டு நிறுவன தினம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று பேரணி.
திமுக பேரணி முதல் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் வரை..! #TopNews
திமுக இன்று நடத்தும் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். பேரணியை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவுகளை அனுசரித்து பேரணி நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி. பேரணிக்கு நீதிபதிகள் தடை விதிக்கவில்லை என்றும் தகவல்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் விறுவிறுப்படைகிறது உள்ளாட்சித் தேர்தல் களம். மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர வாக்குசேகரிப்பு.
2019-ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்தது இந்திய கிரிக்கெட் அணி. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்.
TopNews | உத்தரப்பிரதேச கலவரம் முதல் ஜார்கண்ட் தேர்தல் வரை
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் 6 பேர் உயிரிழப்பு.வாகனங்கள் தீ வைத்து எரிப்பு.பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிப்பு.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவிலும் நீடித்த போராட்டம். இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு.
குடியுரிமையை நிரூபிக்க சொல்லி யாரும் துன்புறுத்தப்படமாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் விளக்கம். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் என்றும் அழைப்பு
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை. போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு
சீர்திருத்தங்களை கொண்டுவரும் போது எதிர்ப்புகள் எழுவுவதாக பிரதமர் மோடி கருத்து.மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தல்.
ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்.
தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை. 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்.