மாவட்ட கவுன்சிலர்பதவியில் 140க்கு 136 இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி…. | www.patrikai.com
www.patrikai.comஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பொறியியல் பட்டதாரியான 21வயது இளம்பெண்… | www.patrikai.com
www.patrikai.comஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி | www.patrikai.com
www.patrikai.comகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட தனது மகள் மற்றும் மகன் தோல்வியை சந்தித்தனர் என அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
http://bit.ly/2QET1gs #LocalBodyElectionResult #ADMK“குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் மகன், மகள் தோல்வி” - அன்வர் ராஜா
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட தனது மகள் மற்றும் மகன் தோல்வியை சந்தித்தனர் என அக்கட்சியின் முன்னாள் எம்பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை எண்ணப்பட்டு வருகின்றன. 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மேலும் சில மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே ராமநாதபுரத்தில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்.பி அன்வர் ராஜாவின் மகன் மற்றும் மகள், திமுகவிடம் தோல்வியடைந்துள்ளனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மகன், மகள் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அன்வர் ராஜா புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அதில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என சிறுபான்மையினர் அச்சப்படுகின்றனர்.
அசாமில் மட்டுமே அமல் என பாஜக கூறியதால் அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரவு தந்தது. சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் எனவும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்லும் எனவும் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
“நான்தான் முன்னிலையில் இருந்தேன்” - மறு வாக்கு எண்ணிக்கைக்கு வலியுறுத்தி தற்கொலை முயற்சி
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை; மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
- பொன்.ராதாகிருஷ்ணன் #LocalBodyElectionResult | #BJP #DMK
தள்ளுமுள்ளு, வாக்குவாதம், தடியடி என பல்வேறு காட்சிகளை கடந்து, உள்ளாட்சிப் பதவிகளுக்காக பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
http://bit.ly/2FhW34V #LocalBodyElection #LocalBodyElectionResultதமிழகம் முழுவதும் விடிய விடிய நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
தள்ளுமுள்ளு, வாக்குவாதம், தடியடி என பல்வேறு காட்சிகளை கடந்து, உள்ளாட்சிப் பதவிகளுக்காக பதிவான வாக்குகளை‌ எண்ணும் பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வானவை தவிர, ‌73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கின. ‌சில இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.
சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும், முடிவுகள் அறிவிப்பு தொடர்பாகவும் பல இடங்களில் ‌அதிகாரிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தன. அரியலூர் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடியும் நடத்த வேண்டியிருந்தது.
மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, ‌கரூர் ஆகிய மாவட்‌‌டங்களில் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.‌ வாக்கு எண்ணும் பணிகள் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய நடைபெற்றது. இப்பணிகள் இன்று மாலை வரை நடத்தப்படும்‌ என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.