பாரதீய ஜனதாவை நோக்கி திரும்பும் கேரள தங்க கடத்தல் விவகாரம்! https://www.patrikai.com/kerala-gold-case-backfires-on-bjp/ @[email protected] #goldsmuggling #GoldSmugglingCase #GoldTerrorLink #backfires
பாரதீய ஜனதாவை நோக்கி திரும்பும் கேரள தங்க கடத்தல் விவகாரம்!
உயர்மட்ட ஆட்கள் தொடர்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின் போக்கு, தற்போது, பாரதீய ஜனதாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. மாநிலத்தை ஆளும் சிபிஎம் அரசை, இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்து வருகிறது பாரதீய ஜனதா என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக கட்டுரையாளர் கே.எம்.ராகேஷ் குறிப்பிட்டுள்ளதாவது; தேசிய புலனாய்வு ஏஜென்சி பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் நாயர், பாரதீய ஜனதாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும், சரக்கு பரிசோதனை ஏஜென்சியின் உரிமையாளரும், 30 கிலோ தங்கம் அடங்கியிருந்த...