தஞ்சாவூர் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு! https://patrikai.com/geographical-code-for-thanjavur-narasinganpettai-nadaswaram/ via @[email protected]
#Thanjavur #Narasinghampettai #Nagaswaram #music #Instrument #GITag #GeographicIndication
தஞ்சாவூர் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு!
தஞ்சாவூர்: புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் மிகவும் பிரசித்தி பெற்றது. 17-ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாதஸ்வர இசையில் "சுத்த மத்தியமம் ஸ்வரம்" மற்றும் "பிரதி மத்தியமம் ஸ்வரம்" கொண்டு தான் தாய் ராகங்களை பிரித்து வாசிக்கப்படும். இந்த நாதஸ்வர கருவியை கடந்த 1955 ஆம் ஆண்டு...