தரிசாவே கிடக்கே..
நாம்தான் வெக்கையை உஜாலாவில் ஊறப்போட்டு வெளுத்திருக்கிறோமே என அசால்டட்டாகதான் #அசுரன் பார்க்க ஆரம்பித்தேன். தனுஷின் அசுரத்தனமான சிவசாமி எலிவேஷனில் மிரண்டுபோய், கண்ணீர் பொங்கப்பொங்க பார்த்துமுடித்தேன். உயர்தரம்👌
ஒரு சேஞ்சுக்கு,வெற்றிமாறனை தனுஷ் காப்பாற்றிய முதல்படம் இதுவென்பேன்.
கதையின் உள்கருவை கிரகித்து அதை 'ஓடக்கூடிய சினிமா' வடிவத்துக்கு மாற்றியதிலேயே வெற்றி வெல்கிறார்.ஆனால் மேக்கிங் அவசர அடி. ஏகப்பட்ட டப்பிங் ஃபில்லர். தேர்ந்த டெவலப்பர் Code அடித்து அரைகுறையாக UnitTest செய்யும் பாங்கில்..!
