தற்குறி

112 Followers
105 Following
222 Posts
🚶‍♂️• ARR • Wandering Soul • Agnostic • Animism • Apolitical • பித்துநிலை • 🖤❤️ •
ஆர்வம்Beer, கவிதை, Technology of Betterment, AI
அரசியல் நிலைப்பாடுLeft of the Center
கருத்தியல்சிவப்பின் சமதர்மம், கறுப்பின் பகுத்தறிவு
#birdsite@essaar
அப்பறம் மக்கழே..
நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்
அக்கவுன்ட் deactivate பண்ணப்போறேன்.
From midnight today.

இனிமே ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி மட்டுமே ட்விட்டர் வரப்போறேன்..

திருந்துன என்ன வாழ்த்தி அனுப்புங்க பிரண்ட்ஸ். 🚶🏿‍♂️

கிட்ஸ் பீ லைக்:

“நீ 80s கிட்ஸ்;
நான் 90s கிட்ஸ்;
அவன் 2k கிட்ஸ்”

லெஜன்ட்ஸ் பீ லைக்:

“நீயும் நானும்
contemporary”

சொல்வது போல்
நீ மென்மையின்
உருவெல்லாம்
கிடையாது.
நீ தென்றலில்லை.
மயிற்தோகையில்லை.
சந்தன தண்மையில்லை.
..
நீ வன்மை
நீ ஈட்டியின் கொடூரம்.
நீ அரிவாள் படிந்த குருதி.
நீ போர்மேகம்.
நீ சூறாவளி.
நீ கொடூரத்தின் முத்தம்.
நீ என் உயிர் வடித்து
கோப்பை ஊற்றிப்பருகும்
பகல் குடிகாரி.
நீ நீ.
💃🏻
இந்த கர்த்தன தூக்கிட்டுப்போய் அறைஞ்சிவிடுங்கப்பா யாராச்சும். படுத்துறான்.
அடியே வா.
நீ தேவதையெல்லாம்
இல்லை என
எனக்கு
புரிய வையேன்.
💃🏻
ஒரு கடவுள் புகைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு கடவுள் குடித்துக் கொண்டிருக்கிறான். அங்கே இரண்டு கடவுளன்கள் இன்னும் பிறவி எடுக்காத ஒரு நங்கையை புணர்ந்து கொண்டுள்ளனர். இவர்களை பார்த்து ‘மனிதனாய் பிறக்கக் கடவது’ என சபித்துக் கொண்டிருக்கிறேன். நான் சாத்தான். நன்னெஞ்ச சாத்தான்.
ஆடை களைவோம்
நாநாழிகையில்,
காமம் கடப்போம்
தேகத்தினவுகள்
தின்றுசெறித்த
அன்பின் பின்னிரவில்,
கனிகாய் கொய்வோம்
சுனை தேடிப்பருகுவோம்
முயல் பிடித்துக்
களிப்போம்
நமக்கு நாமே
இறையாவோம்
நான்கு சுவர்களுக்குள்
அடைபட்ட
ஓராதிக் காட்டில்
ஆதாமும் ஏவாளும்
ஆகித்திரிவோம்.
வா பேராதிப்
பெண்ணே வா
💃🏻
ஒரு சோகமொன்றை வாரியள்ளி கொண்டாடப்போகிறேன். என் சோகங்கள் வேண்டாம் அதில் சுவாரசியம் இல்லை. அல்லது சிறிதும் உடைந்ததுமாக இருக்கிறது. ஆனால் பிறர் சோகம் எப்படி நாம் கொண்டாட்டப் பொருளாகும். அதுவும் வேண்டாம். இதுவரை எனை இன்னும் அண்டாத ஒன்றை எடுத்து கொள்கிறேன் அதுதான் சரி. அதென் உறவல்லவா.
ஒரு சோகமொன்றை அள்ளி வாரி கொண்டாடப்போகிறேன். என் சோகங்கள் வேண்டாம். அதில் சுவாரசியம் இல்லை. அல்லது சிறிதும் உடைந்ததுமாக இருக்கிறது. ஆனால் பிறர் சோகம் எப்படி நாம் கொண்டாட்டப் பொருளாகும். அதுவும் வேண்டாம். இதுவரை எனை இன்னும் அண்டாத ஒன்றை எடுத்து கொள்கிறேன். அதுதான் சரி.