Ravikumarmgr

15 Followers
15 Following
25 Posts
ஆண்டவன் படைச்சான்..
என்கிட்ட கொடுத்தான்..
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்..
ஒவ்வொரு ஆணின் மிகப் பெரிய பலமும், பலவீனமும் அவன் மனதுக்கு மிகப் பிடித்த பெண் தான்!

மகனாரிடம் அவரின் நண்பர், குக்கர் ஏன் விசிலடிக்குது தெரியுமா என்று கேட்டிருக்கிறார்! அதற்கு மகனார் சொன்ன பதில்...

அது விசில் இல்லடா அது கத்துது... நீ வேணா அந்தத் தீக்குள்ள ரெண்டு செகண்ட் விரலை விட்டுப் பாரேன் நீயும் அதே மாதிரி விசிலடிப்ப...

உதவி செய்வதற்கு
வழி நடத்துவதற்கு
ஆறுதல் சொல்லி தேற்றுவதற்கு
தைரியம் தருவதற்கு
யாரும் இல்லாதவர்கள் தான்
எது இருந்தும் இல்லாதவர்கள்
உண்மையான அனாதைகள்!
முதல் காதல்ங்குறது கோவில் வாசல்ல கழட்டிப் போட்ட செருப்பு மாதிரி!# அடிக்கடி அது ஞாபகமாவே இருக்கும்.
எல்லோரும் என்
மரண ஊர்வலத்திற்கு வந்து விடுங்கள்!
முடிந்தால் மலர்கள் கொண்டு வாருங்கள்!
இன்னும் முடிந்தால்
இரண்டு சொட்டுக் கண்ணீர்!
என் பின்னே நடந்து வரும் போது
நான் உங்களை சிரிக்க வைத்ததை
உங்களோடு சினிமா பார்த்ததை
உங்களுக்குப் பரிசு கொடுத்ததை
அவசியம் நினைத்துக் கொள்ளுங்கள்!
நான் உங்களை ஏமாற்றியிருப்பேன்
துரோகம் செய்திருப்பேன்
அதையெல்லாம் என் பிணம் எரியும்
தீயில் போட்டு விடுங்கள்
தீ இன்னும் நன்றாக எரியட்டும்!
நான் என் உடலை விட்டுப் போனதைப் போல
என் மீதான கோபங்களை விட்டு விட்டு
வீடு திரும்புங்கள்!
பள்ளிக் காலத்தில் அம்மா வாங்கித் திங்கத் தரும் 20 பைசாவில் மிச்சம் பிடித்து ஐந்து பைசாவுக்கு பிரைஸ் அட்டை கிழிக்கும் போது கிடைக்கும் அதே சந்தோஷம் இப்போது கூகுள் பேயில் ஸ்க்ராட்ச் கார்டைத் தேய்க்கும் போதும்!

இது பொண்ணோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்... பையனோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எங்கே...

ஏங்க எல்லாரும் ஜாதகம் தான் கேப்பாங்க... நீங்க என்னடான்னா மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் கேக்குறீங்க...

ஜாதகத்துல என்னங்க இருக்கு... ரெண்டு ஹோமம் பண்ணா சரியாயிடும்... ஆனா மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் அப்படி மாத்த முடியாதுல்ல...

#வினயவிதேயராமா #WhyILuvTelugumovies

வள்ளுவர், அவ்வையார் தொடங்கிப் பலரும் அசைவ உணவுகளை உண்ணாதீர்கள் என்று பலமாக அட்வைஸ் செய்திருக்கிறார்கள்! சீரக சம்பா பிரியாணியும், சிக்கன்65யும் அந்தக் காலத்தில் இல்லாமல் போனது தான் இப்படி அவர்கள் எதிர்த்ததன் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்!

கறிக்கடைக் கூட்டத்தில் காத்திருந்த போது உதித்த சிந்தனை....

இந்தப் பிரபலங்களோட பெருமை பீத்தக்கலையங்களைத் தாங்க முடியல...

விஐபிக்கள் யார் செத்தாலும், யாருக்காவது பிறந்த நாள் வந்தாலும் அவங்க கூட இவங்கே எடுத்த போட்டோவைப் போட்டு நாங்களும் பெரியாளு தான்னு பிளாட்பாரம் கைரேகை ஜோசியர் மாதிரி சிலுத்துக்குறாங்ய...

தனியார் பள்ளிகளில் எழுதி வைக்க வேண்டிய குறள்...

அகர முதல எழுத்தெல்லாம் அஞ்சு
லட்சம் குடுத்துப் பழகு