@DevaSubramanian

113 Followers
50 Following
53 Posts
Cyber coolie

மொத்தமாக மரணத்தை எதிர்கொள்ளும் எவருமே மகிழ்ச்சியானவரே...

சிறிது சிறிதாக தினம் சிதைந்து, உடலும் உளமும் தினம் அவதியுற்று
உடன் இருப்போரை அண்டி பிழைத்து
அஞ்சி அஞ்சி நாட்களை கடந்து,
எனை கொண்டு போகமாட்டாயா என ஏங்கும் தருணங்களை காணாது இருப்பது நலம்...

வாழும் நாட்களை பயனுள்ளதாக கழித்து இறுதி நாட்களை நோக்கி நடைபோடும் எந்த கிழவனும் கட்டிளங்காளையே...

மிக நீண்ட ஆயுட்காலத்தில் நீங்கள் அதிகம் காணப்போவது உற்றாரை, நேசித்தோரை இழப்பது மட்டுமே...
மரணம் ஒரு அருமையான,முழுமை தரும் முற்றுப்புள்ளி.

By the way, if you find the UI translations in Hindi/Tamil/others lacking, you can help add/fix them on this page:

https://crowdin.com/project/mastodon

Mastodon — Translation Project on Crowdin

Help us translate Mastodon and bring it to the world!

Crowdin
R E S P E C T
பொதுப்புத்தி முட்டாள்தனத்தை நோக்கி நகரும்போது முற்போக்காளர்களின் மனத்தடுமாற்றம் சமூக விளைவாக பிரதிபலிக்கிறது...
நாம் அடிபணிய போகிறோமா?
பிழைத்து கிடப்பதை பெருமையாக கருதப் போகிறோமா?
இழப்புகளை நோக்கியதாக அஞ்சி இருக்கப் போகிறோமா?
இல்லை முன்னைறி இந்த தடைகளை உடைக்கப் போகிறோமா?
முற்போக்காளர்களின் அமைதி மொத்த சமூகத்தை மயானத்துக்கு இட்டுச் செல்லும்..
வாழ்க்கையின் தேடல்கள் நம்மை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துகின்றன...
புதிதாக ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டாகி விட்டது..
இப்போது என்ன வாசிப்பது என்றே புரியாமல் குழப்பமான மன ஓட்டத்தோடு தற்காலிக ஆறுதலாக Brief Answers to the big questions - Stephen Hawking படித்துக் கொண்டிருக்கிறேன்.
புத்துயிர்ப்பு நாவல் மொத்தமாக என்னை வாறி எடுத்துச் சென்று விட்டது, சீக்கிரம் இன்னொரு சிறந்த நாவலை படிக்க ஆயத்தமாகனும்.
மனச்சோர்வும் உற்சாகமின்மையுமாக சில நாட்கள் கழிகின்றன...
வாழ்வின் பெருத்த அவமானங்கள் மட்டும் மனத்தில் மறையாமல் இருந்து விடுகின்றன.
புத்துயிர்ப்பு நாவலின் பாதிப்புகள் நீங்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி..
தற்காலிகமாக Stephen Hawking புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளது மனதை வேறு திசையை நோக்கி நகர்த்தியுள்ளது...
எப்படியும் டால்ஸ்டாயின் சிறுகதைகள் மற்றும் அன்னாகரீனா நாவல் படிக்கனும்னு முடிவெடுத்திருக்கேன்...
அடுத்த இரண்டு புத்தகங்களும் பொருளாதாரம் சம்மந்தமானவை, அவற்றை படித்து முடித்த பிறகு நிச்சயமாய் அன்னாகரீனாதான்...
தேடலிலும் வாசிப்பிலும் காணும் மகிழ்ச்சி நம்மை முந்தித் தள்ளும் விதமாக இருக்கிறது...
@Aarrvie நன்று அதை படிச்சிட்டு வாங்க...
@Aarrvie ஆத்தாடி அது ஒரு காவியமாச்சே??
எத்தனையாவது பாகம் படிக்குறீங்க இப்போ??