எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”
இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.
“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.
“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார்.
சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.
புளி டப்பாவைத் திறந்தபோது, அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது. ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.! அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.
நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?” என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று மேலும் பலமாகச் சொறிந்துகொண்டேன்.
ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன்.
கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பது தெரியாமல் இருக்க, தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.?
பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.?
(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம்.
வள்ளுவர்
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார். இதற்குப் பொருள், “எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு”.
மறுநாள் காலை நீங்கள் எழுந்த பிறகு எல்லாம் பெரிசாகிவிட்டது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...முடியாது என்கிறார் Jules henri. அவ்வளவு தான் நம் அறிவு.
சாதாரணமாக இதையே அளக்க முடியாதபோது பெருமாளை இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.
ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
திருப்பாணாழ்வார்.
ஆனால் என்றாவது எனக்கு ’அறிவு இல்லை, அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, காரணம் நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.
இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம்.
கட்டுரையின் கடைசிக்கு வந்துவிட்டோம். மீண்டும் நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன் அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே.!
என்ற பாசுரத்தைப் படிக்கும்போது, நம்மாழ்வாரும் நம்மைப் போலக் கேள்விகள் தான் கேட்கிறார் என்று தோன்றும். ஆனால் இந்தப் பாசுரத்திலேயே பதில் இருக்கிறது.! இந்தப் பாசுரத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவனோ,
அவனே மயர்வு அற மதி-நலம் அருளினன் எவனோ
அவனே அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவனோ
அவனையே துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே.!
ஏன் நம்மாழ்வார் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு அதே பாசுரத்தை இப்படிப் படிக்க வேண்டும்.
உயர்வு அற உயர் நலம் உடையவனான அவனே,
அயர்வு அறும் அமரர்களுக்கு அதிபதியான அவனே நம்மாழ்வாருக்கு
மயர்வு அற மதி நலம் அருளினான்.
ஆகையால் நம்மாழ்வார் கூறும்
அறிவுரைகளின் படி அவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழ வேண்டும்.
சில சமயம் கேள்வியே பதிலாக இருக்கும்.!
An #InformativeRead from #Whatsapp