அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா திட்டப் பணியாளர்கள் மற்றும் மதிய உணவுத்திட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கிடு, சமூகப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்து. #Strike2SaveIndia
ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றிருந்தவர்களுக்கு இருந்த பாதுகாப்புகள் அனைத்தையுமே புதிய பென்சன் திட்டம் அழித்துவிட்டது. ஓய்வூதிய நிதியை பயன்படுத்தி பங்குச் சந்தையை ஊக்கப்படுத்துவதுதான் அரசின் கொள்கையா? #Strike2SaveIndia
புதிய பென்சன் திட்டத்தை ரத்துச் செய்திடு, பழைய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்திடு, தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்திடு. #Strike2SaveIndia
பொதுத்துறை நிறுவனங்களில் கூட பாதிக்கும் அதிகமான ஒப்பந்த பணியாளர்களே வேலை செய்கிறார்கள். காலிப் பணியிடங்களை நிரப்பிட மறுக்கும் அரசாங்கம், பாதிக்கும் குறைவான கூலியில் ஒப்பந்தப் பணியாளர்களைச் சுரண்டுகிறது. #Strike2SaveIndia
ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் நிரந்தரப் பணி வழங்கு, திட்டப்பணியாளர்களை நிரந்தரமாக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு. #Strike2SaveIndia
சமையல் எரிவாயு விலை கற்பனைக்கு எட்டாத விதத்தில் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. வீட்டு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயினை கடந்துவிட்டது. பொதுமக்களைச் சுரண்டுவதே மோடி அரசின் கொள்கையாக இருக்கிறது. #Strike2SaveIndia
செல்வம் குவிக்கும் பெரும் பணக்காரர்களுக்கு சலுகை மேல் சலுகை கொடுக்கும் மோடி அரசாங்கமே, அவர்கள் சொத்துக்களின் மீது வரிபோட்டு வசூலித்திடு. #Strike2SaveIndia
2014 ஆம் ஆண்டிலிருந்து மோடி அரசாங்கம் ரூ 18.72 லட்சம் கோடிகளை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக வசூலித்துள்ளது. இப்படித்தான் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. #Strike2SaveIndia
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசின் கலால் வரியை குறைத்திடு, விலைவாசியைக் குறைத்திட அவசியமான நடவடிக்கைகளை எடுத்திடு. #Strike2SaveIndia
இந்தியாவின் செழிப்பான 10% குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானம், நாட்டின் மொத்த வருவாயில் 57% ஆகும். வறிய 50% பேருடைய வருமானம் 13% மட்டுமே. இதனால்தான் பணக்காரர்கள் மீது வரிபோட வலியுறுத்துகிறோம். #Strike2SaveIndia