#சிலந்தி: திரை தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய படத்தின் 15-வது ஆண்டு!
https://patrikai.com/silandhi-first-tamil-digital-movie-completes-15-years/ via @[email protected]
சிலந்தி: திரை தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய படத்தின் 15-வது ஆண்டு!
திரைப்படம் என்றாலே பிலிம் ரோல்தான் நினைவுக்கு வரும். கால மாற்றத்தில் டிஜிட்டல் சினிமா வந்தது. இந்த டிஜிட்டல் சினிமாவுக்கு, தென்னிந்தியாவில் ஆரம்பப்புள்ளி வைத்தது, 2008ம் ஆண்டு மே 8ம் தேதி வெளியான சிலந்தி திரைப்படம்தான். இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த சங்கர் பழனிச்சாமி, ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளர் ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கன்னடத்தில் ரணதந்த்ரா, தமிழில் அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா...