தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

http://bit.ly/2VKOixG #GISAT1

தொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைப்பு

பூமியை கண்காணிக்கும் வகையிலான ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை ஏவப்படுவதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ இன்று அறிவித்தது. கொரோனா பாதிப்பு: ஜேஎன்யூ பல்கலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து !  ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இருந்து ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவிரப்பு வெளியிட்டது. மேலும் ஜிசாட் 1 ஏவப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியிருந்தது. ஜிசாட்-1 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவிசார் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதுதொடர்பான அதிநவீன புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கும். ஜிசாட்-1 செயற்கைக்கோள் விவசாயம், வனம், தாதுக்கள், இயற்கை பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை கண்காணிக்க உதவும். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி !  இது பூமியில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்க உதவும். இந்தச் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட்டில் ஏவ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Geo Imaging Satellite-1 (GISAT-1) will be India's first agile Earth observation satellite operating from Geostationary orbit. Launch at 1743 Hrs IST on March 5th by GSLV-F10.

This picture shows GISAT-1 between two halves of GSLV-F10's payload fairing

#GSLV #GSLVF10 #GISAT1 https://t.co/o2TgmC9l0E

https://twitter.com/isro/status/1233341537662062592?s=09

ISRO on Twitter

“Geo Imaging Satellite-1 (GISAT-1) will be India's first agile Earth observation satellite operating from Geostationary orbit. Launch at 1743 Hrs IST on March 5th by GSLV-F10. This picture shows GISAT-1 between two halves of GSLV-F10's payload fairing #GSLV #GSLVF10 #GISAT1”

ISRO To Launch GISAT-1 Earth Observation Satellite On 5 March To Provide Real Time High-Resolution Pictures 

GISAT-1 is the first of the two agile Earth observation satellites to provide constant surveillance.