ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்

மரியாதை கெட்டுப் போவதை பற்றி எழுதுவது என்று வந்தாச்சு, இதையும் எழுதி விடுகிறேன்.

முதல் முறை ஜனாதிபதி ஆவதற்கு முன்பே டிரம்ப் பெண்பிள்ளை பொறுக்கி (“பெண்களைப் பார்த்ததும் முத்தம் கொடுப்பேன், காத்திருக்க மாட்டேன், நீ ஸ்டார் என்பதால் அவர்கள் இணங்கிப் போவார்கள், என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், நேராக அவர்கள் பிறப்புறுப்பைப் பிடித்து இழுத்துவிடு,” என்று சொன்னவன், இது தெரிந்தும் அவனுக்கு ஓட்டு போட்டார்கள்) என்பது தெரியும், மூன்று முறை திவாலானவன் என்பதும் தெரியும், சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதும் தெரியும், நிற வெறியன் என்பதும் தெரியும்.

அவனது நடவடிக்கைகள் தமக்குப் பிடிக்காதவர்களையும் தமக்கு பொருட்டாயில்லாதவர்களையும் பாதிக்கும்போது அந்த அத்துமீறல்களையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் அலறல்களையும் பார்த்து கிளுகிளுப்பாய் ரசித்தவர்கள் இப்போது அவன் தம்மையும் தம்மவர்களையும் கை வைக்க வரும்போது நம் பக்கம் சாய்வதை ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது.

எப்போதோ சமரசமானவர்களுடன் இப்போது சமரசம் செய்து கொள்வதில்தான் எல்லாம் முடியப் போகிறது என்றால் இந்த பத்து வருஷ சண்டைக்கும் தனிமைக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன அர்த்தம்?

#absurdities