#பொங்கல் சிறப்பு பேருந்துகள் - 1.40 லட்சம் பேர் முன்பதிவு - சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் - முழு விவரம்
https://patrikai.com/pongal-special-buses-1-40-lakh-advance-booking-special-bus-departure-location-full-details/
பொங்கல் சிறப்பு பேருந்துகள் – 1.40 லட்சம் பேர் முன்பதிவு – சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் – முழு விவரம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழகஅரசு இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் எனப்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர்...