டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மந்தமான வாக்குப் பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 30.18 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

➡️விவரம்: http://bit.ly/2w1QQNd #DelhiElection #DelhiAssemblyPolls

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் வரை மந்தமான வாக்குப்பதிவு

 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 30.18 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை எட்டு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்குப்பதிவு நீண்டநேரம் மந்தமாகவே இருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதாவுடன் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்து வாக்களித்தார். அதே வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சாபர்வாலா ஆகியோரும் வாக்களித்தனர். இதற்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா எம்பி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் வாக்களித்தனர். புது டெல்லி நிர்மான் பவனில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது மகன் ராஜீவ் வதேரா ஆகியோருடன் வந்து லோதி எஸ்டேட் பகுதியில் வாக்களித்தார்.