'தைப்பூசம்' திருநாள் இனி அரசு பொது விடுமுறை... எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
https://www.patrikai.com/thaipoosam-thirunaal-is-public-holiday-government-of-tamil-nadu-announced/ #ThaiPoosam #thirunaal #PublicHoliday #government #TamilNadu
‘தைப்பூசம்’ திருநாள் இனி அரசு பொது விடுமுறை… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: தைப்பூசம் விழாவை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 28ந் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தைப்பூசத்தன்று அரசு விடுமுறை விடப்படுவதாகவும், இனி ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று அரசு பொதுவிடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்க்கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக...