தேசிய இளைஞர்கள் தினத்தன்று #டாஸ்மாக் கடைகளை அடைக்கக்கோரி வழக்கு!
https://patrikai.com/case-to-close-tasmac-shops-on-january-12-national-youth-day/
#NationalYouthDay #VivekanandaJayanti #vivekananda_sandesh_yatra #TASMAC #Closure #MaduraiHighCourt @[email protected]
மதுரை: தேசிய இளைஞர்கள் தினமான ஜன.12ந்தேதி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு 12 வாரத்திற்குள் பரிசீலித்து ‘தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை செயலர் நடவடிக்கை எடுக்க’ உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறந்த இளைஞர் ஐகானான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும். தேசிய...
‘இங்கிருந்து கனிமவளம் போகிறது, அங்கிருந்து கழிவுகள் வருகிறதா?’ கேரள மருத்துவ கழிவுகள் வழக்கில் நீதிபதிகள் காட்டம்!
https://patrikai.com/minerals-goes-from-here-waste-comes-from-there-judges-questioned-in-kerala-medical-waste-case/
#SurgicalWaste #waste #minerals #Kerala #TamilNadu #MaduraiHighCourt
மதுரை: கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள், தமிழக எல்லையோர பகுதிகளில் விதிகள் மீறி கொட்டப்படும் வழக்கில் நீதிபதிகள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தனர். தமிழ்நாட்டில் இருந்து கனிமவளம் கேரளா போகிறது, அங்கிருந்து கழிவுகள் தமிழ்நாட்டுக்கு வருகிறதா?’, அதை தடுக்க முறையான நடவடிக்கை எடுப்பதில்லையா என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. கேரளாவில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் தமிழக எல்லையோர பகுதிகளிலும், தமிழ்நாட்டின் காடுகளிலும் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக,...
கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிப்பு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை சாதனை… https://patrikai.com/in-the-last-3-months-6300-cases-have-been-trialed-and-concluded-high-court-madurai-branch-achievement/ via @[email protected]
மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ந்தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்து 062 வழக்ககளும், கடந்த ஜூலை 25 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதி மன்றங்களில் ஒரு கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகளும், நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில்...
#மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026ல் முடியும்! நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…
https://patrikai.com/madurai-aiims-hospital-works-to-be-completed-by-2026-union-government-informed-the-court/ via @[email protected]
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் உள்பட அனைத்து பணிகளும், அக்டோபர் 2026க்குள் முடிக்கப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் , “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அதற்கான அடிக்கல்லை நாட்டியது....
முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு… https://patrikai.com/no-one-should-install-the-statue-in-tamil-nadu-without-proper-permission-high-court-order/ via @[email protected]
#ImmanuelSekaran #IMMANUEL #Sekaran #Statue #Madurai #maduraihc #MaduraiHighCourt
மதுரை: முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஒரு தரப்பினர் இமானுவேல் சேகரன் சிலை வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சிலையை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற...
தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம்! உயர்நீதிமன்றம் https://patrikai.com/if-illegalities-in-detention-orders-penalty-for-the-government-high-court-madurai-warns/ via @[email protected]
#PreventiveArrest #illegal #Detention #government #penalty #MaduraiHighCourt #MaduraiHC
மதுரை: தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர், தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவினை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் தடுப்புக்காவல் சட்டத்தில் தனது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு போடும்...
கல்வி தொலைக்காட்சிக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கும் டெண்டருக்கு உயர் நீதிமன்றம் தடை.! https://patrikai.com/high-court-madurau-interim-banned-the-tender-for-purchasing-technical-equipment-for-kalvi-television/ via @[email protected]
#TamilNadu #TNGovt #education #EducationForAll #Television #equipment #maduraihighcourt
மதுரை: தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சி தொடர்பாக டெண்டர் விட உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு பள்ளி மாணாக்கர்கள் பயன்பெற கடந்த அதிமுக அரசு கல்வித்தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படங்கள் பாடங்கள் மாணவர்களுக்கு பெரிதும் உபயோகப்பட்டு வந்தது. அரசால் நடத்தப்பட்டு வரும் டிவி சேனல் கல்வி தொலைக்காட்சி. இதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டு வருகின்றன. இந்த நிலையில், ...
குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதா? உயர்நீதிமன்றம் காட்டம் https://patrikai.com/not-accept-sending-kids-to-school-by-auto-high-court-madurai/ via @[email protected]
மதுரை: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளது. பள்ளிக்கல்வி துறை இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது . தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும்...