
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று 2வது நாளாக தீவிர விசாரணை!
கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்ட மனோஜ், சயான் ஜாமினில் வெளியே வந்த நிலையில்,...
www.patrikai.com
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அதை கண்டு கொள்ளாமல், கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தில் ...
www.patrikai.com
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை!
கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்பைடயினர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்பட அதிமுக பிரமுகர்கள், அங்கு வேலை செய்தவர்கள் என 210-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து, அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவன் அவரது தம்பி சிபி மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர்...
www.patrikai.com
கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை
சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நேற்று நடத்தினர். பூங்குன்றனிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது இதையடுத்து இந்த வழக்கில் 2வது நாளாக இன்று பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
www.patrikai.com
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸ் விசாரணை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அவரத தோழி சசிகலா உள்ளிட்ட 210-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த, மரம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியும், அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவனிடம்...
www.patrikai.com
கோடநாடு வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி மாற்றம் – சஜீவன் சகோதரரிடம் இன்று போலீசார் விசாரணை!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே தனிப்படை போலீசார் சசிகலா உறவினர்கள், விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தினர்....
www.patrikai.com
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!
சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அங்கு கொலை கொள்ளை நடைபெற்றது. இந்த கொள்ளை, கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக, ஐ.ஜி.,...
www.patrikai.com