விக்கி மூலத்தில் படங்களை இணைக்க ஒரு கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

நாம் பல்வேறு கட்டுரைகளில், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகளில் குறிப்பிடத்தக்க துறையினருக்கு பயன்படும் வகையிலான செயலிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நமது கணியம் இணையதளத்தில் கூட எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களிடம்  நேர்காணலும்  மேற்கொண்டு இருந்தோம். அது தொடர்பான கட்டுரையில் கூட  ஏற்காடு இளங்கோ அவர்கள் சுமார் 23,000 புகைப்படங்கள் வரை விக்கி மூலத்தில் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன்.

உண்மையிலேயே, விக்கி மூலத்தில் புகைப்படங்களை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் கணினிகளை பயன்படுத்துகிறார்கள். இதில் இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால், இத்தகைய கட்டற்ற திறந்த மூல பங்களிப்பாளர்களால் நினைத்த நேரத்தில் புகைப்படங்களை பதிவிட முடிவதில்லை. ஒரு நாள் மேற்படி எழுத்தாளரோடு நான் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் முதலில் புகைப்படங்களை எடுத்து சேமித்து வைத்து பிறகு ஒரு நாள் முழுவதையும் செலவு செய்து புகைப்படங்களை பதிவிடுவதாக குறிப்பிட்டிருந்தார். ஒரு புகைப்படத்தை பதிவிடுவதற்கே 10 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்வதாக சொன்னார். அப்படியானால் 23,000 புகைப்படங்களை பதிவிட எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என யோசிக்கும் போதே எனக்கு தலைசுற்றியது.

முழுக்க முழுக்க லாப நோக்கமற்ற பொதுநல சேவையாக இணையத்திற்கு இதுபோன்ற பங்களிப்பை செய்யும் கட்டற்ற மூல பங்களிப்பாளர்களின் பணியை எளிமையாக்கும் வகையில் விக்கிப்பீடியாவின் ஒரு செயலி உங்களுக்காக இருக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி, உங்களால் நேரடியாக விக்கி மூலத்தில் புகைப்படங்களை இணைக்க முடியும். அதுவும் மொபைலில் இருந்தே. கணினியை ஒப்பிடும்போது ஓரளவுக்கு விரைவாகவே இருக்கும். மேலும் நினைத்த இடத்தில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, அதிசயக்கத்தக்க ஒரு தாவரத்தை புகைப்படம் எடுத்துவிட்டு அதை பதிவேற்ற கணினியை தேடி அலைய வேண்டியதில்லை. எளிமையாக இந்த செயலியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

வழக்கம்போல,இந்த செயலி fdroid தளத்தில் காணக் கிடைக்கிறது. மேலும் செயலியை நிறுவுவதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

f-droid.org/packages/fr.free.nrw.commons

மேலும், இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் கட்டற்ற விக்கி மூலத்தில் தங்களால் முடிந்த சிறந்த புகைப்படங்களை இணைத்துக் கொண்டு வாருங்கள்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல இணைய சமூகத்தில், ஆரோக்கியமான பயனுள்ள தகவல்கள் அனைத்து இடங்களையும் சென்று சேர நாம் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்.

மீண்டுமொரு கட்டற்ற செயலியில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:

ஶ்ரீ காளீஸ்வரர் செ

இளம் அறிவியல் எழுத்தாளர்.

மின் மடல் : [email protected]

இணையம் : ssktamil.wordpress.com

#androidApps #androidOpensourceSeries

Commons | F-Droid - Free and Open Source Android App Repository

Upload images to wikimedia.org

உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 17

உங்களுடைய வரவு செலவுகளை பார்ப்பதற்கு மற்றும் எங்கு செலவழிக்கிறோம் என்றே தெரியாமல் பணம் செலவழிகிறது? என்று வருந்துபவர்களுக்கு ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி இருக்கிறது

இந்த ஆண்ட்ராய்டு செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால், உங்களுடைய தகவல்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பெரு நிறுவனங்களின் கைகளில் சென்று விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுமோ என்று வருந்த வேண்டாம்.

இந்த செயலியானது மிகவும் எளிமையான மற்றும் நுட்பமான வரவு செலவு கணக்குகளை சமாளிக்கக்கூடிய வசதிகளை வழங்குகிறது. மேலும் ,இந்த செயலி ஒரு இலவச செயலி ஆகும். எளிமையாக புரியும் வகையில் மற்றும் பயன்படுத்தும் வகையிலேயே இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முன்பே சொன்னது போல, கட்டற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், தரவுகள் திருடப்படும் எந்த வித அபாயமும் இல்லை.

இந்த செயலியின் பெயர்  money manager ex ஆகும். வேறு பல இலவச வரவு-செலவு கணக்குகளை பார்க்கக்கூடிய செயலிகள் ப்ளே ஸ்டோரில் கூட காணக் கிடைக்கும். ஆனால், அத்தகைய செயலிகளில் விளம்பரங்கள் அதிகமாக இருப்பதால் பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படும்.

மேலும், உங்களுடைய தனிப்பட்ட வரவு செலவு கணக்குகள் அந்த செயலியை உருவாக்குபவர்களுக்கு தெரிய வந்து அந்த தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தேவையற்ற தனி உரிமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த சரியானது அடிப்படையான வரவு செலவு கணக்குகளை பார்ப்பதற்கு உண்மையிலேயே பயனுள்ளதாக அமையும். எப்போதும் டயரிகளிலேயே எழுதி வைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக இந்த செயலியையும் பயன்படுத்தி பாருங்கள். மேலும் வென் படங்கள்(pie chart), போன்ற வசதிகளும் வழங்கப்படுவதால் இன்னும் தெளிவாக புரிந்து உங்கள் பணம் எங்கே போகிறது என கண்டுபிடித்து விடலாம்.

வாய்ப்பிருப்பின் இந்த செயலியை பயன்படுத்திப்பாருங்கள். இதற்கான இணைப்பை கீழே வழங்குகிறேன்.

f-droid.org/packages/com.money.manager.ex

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#Android #androidApps #androidOpensourceSeries

Money Manager Ex | F-Droid - Free and Open Source Android App Repository

Manage your finances on-the-go, encrypted for security, sync via your storage

6000+ லினக்ஸ் கட்டளைகள்  ஒரே செயலியில்……| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 16

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லினக்ஸ் கட்டளைகள் ஒரே இடத்தில்,அதுவும் இணையமின்றி எளிமையாக படித்துப் பார்க்கும் வகையில் ஒரு செயலியில் காணக் கிடைக்கிறது.

சமீப காலமாக லினக்ஸ் பயனராக மாறியிருக்கும் எனக்கு, எங்கு லினக்ஸ் கட்டளைகளைப் படிப்பது? ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையேடு இருந்தால் வசதியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. அதற்காக சில இணைய புத்தகங்கள் கூட காணக் கிடைக்கின்றன. நம் கணியத்திலும் கூட விரிவான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கூட,அவற்றில் உங்களால் சில நூறு கட்டளைகள் குறித்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலான அனைத்து கட்டளைகளையும் ஒரே இணைய புத்தகத்தில் வழங்கி விடுவது எளிமையான காரியம் அல்ல. அதேபோல இணைய புத்தகமாக இருந்தாலும் கூட, நேற்று விட்டு சென்ற பக்கத்தை தேடி கண்டுபிடித்து படித்து செயலாற்றுவதில் சற்று சிக்கல் இருக்கும். மேலும், அவசரமாக சில கட்டளைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சிறிதே தடுமாற வேண்டி இருக்கும்.

ஆனால், இவை அனைத்திற்கும் தீர்வாக உங்கள் மொபைல் கருவிகளிலேயே பயன்படுத்தும் வகையில் கட்டற்ற லினக்ஸ் கட்டளைகள் அடங்கிய ஒரு செயலி எனக்கு கிடைத்துள்ளது. இந்த செயலியில் 6300+ லினக்ஸ் கட்டளைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் ஒருவரி விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது

வரும் நாட்களில் லினக்ஸ் புராணம் பகுதியில் கூட, இதில் உள்ள கட்டளைகளை பயன்படுத்தி உங்களுக்கு செயல்முறை விளக்கம் வழங்க முடிவு செய்து இருக்கிறேன். மேலும்,இந்த செயலியில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால்,இங்கே ஒரு தடவை நிறுவி விட்டால் போதும் ஒவ்வொரு தடவையும் இணைய நினைப்பு இருந்தால்தான் கட்டளைகளைப் படிக்க முடியும் என்றெல்லாம் இல்லை. முழுக்க முழுக்க இணையமற்ற சூழலில் இயங்கும் திறன் படைத்த செயலிதான் இது.

லினக்ஸ் குறித்த பல்வேறு விதமான குறிப்புகளும் கூட வழங்கபட்டு இருக்கிறது.

மேலும், இந்த செயலியின் அளவும் பத்து எம்பிக்குள் தான் இருக்கிறது என்பதால், உங்கள் மொபைல் கருவிகள் அதிகப்படியான இடத்தை அடைத்துக் கொள்ளுமோ என்கிற பயமும் தேவையில்லை. வழக்கம்போல, கட்டற்ற செயலி என்பதால் விளம்பரங்கள் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எவ்வித பயத்திற்கும் இந்த இடமில்லை. புதியதாக லினக்ஸ் கற்றுக் கொண்டிருக்கும், என்னை போன்ற உங்கள் நண்பர்களுக்கு இந்த செயலியை பகிருங்கள்.

ஒவ்வொரு நினைத்து பயனரின் மொபைல் கருவிகளிலும் நிச்சயம் இடம்பெற்று இருக்க வேண்டிய சிறந்த கட்டற்ற செயலி இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

செயலிகான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

f-droid.org/packages/com.inspiredandroid.linuxcommandbibliotheca

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#Android #androidApps #androidOpensourceSeries #OpenSource

Linux Command Library | F-Droid - Free and Open Source Android App Repository

8506 manual pages, 28 basic categories and a bunch of general terminal tips.

(This post is being modified)

பல்வேறு பயனுள்ள கட்டற்ற செயலிகள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். பலரும் நம்முடைய மொபைல் போனில் தற்போதைய இருப்பிடத்தை, யாராவது கண்டுபிடித்து விடுவார்களா? எனும் அச்சத்திலேயே இருப்பார்கள்.

உதாரணமாக, நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? எங்கு பொருள் வாங்குகிறீர்கள்? எந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள்? போன்ற தகவல்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்படாத செயலிகளை உங்கள் மொபைல் கருவியில் நிறுவும் போது, உங்களுடைய இருப்பிட தகவல்கள் மிக எளிதாக வெளியில் கசியும் அபாயம் இருக்கிறது.

மேலும், சிலர் உங்களிடம் தற்போதைய இருப்பிடத்தை பகிரும்படி சொல்வார்கள். சில தர்ம சங்கடமான சூழல்களில், உங்களுடைய தற்போதைய இருப்பிடத்தை பகிர முடியாமல் போகலாம். நீங்கள் மற்றொரு இடத்தில் இருப்பதைப் போல பகிர வேண்டும் என கூட நினைக்கலாம்.

ஆனால், VPN போன்ற சேவைகளை பயன்படுத்தும் போது பெரும்பாலும் வெளிநாட்டு முகவரியை தான் காட்டும். நம்மூரில் இருப்பவர் எப்படி விநாடிப் பொழுதில் வெளிநாட்டுக்கு போய்விட்டார் எனும் சந்தேகம் ஏற்பட்டுவிடும். ஆனால், உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் சரி! உலகின் எந்த மூலையில் நீங்கள் இருப்பதாக வேண்டுமானாலும்(Anytime anywhere)காட்டிக் கொள்வதற்கு ஒரு செயலி இருக்கிறது.

என்னப்பா! கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா. இந்த செயலியின் பெயர்தான் ஃபேக் ட்ராவலர்(Fake traveler). இந்த செயலியானது கட்டற்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் குறித்து பயப்பட வேண்டிய தேவை இல்லை.

ஆனால், இந்த செயலியை பயன்படுத்துவதற்கு உங்களுடைய மொபைல் கருவியின் டெவலப்பர் ஆப்ஷனை ஆன் செய்து(Developer option) வைத்திருக்க வேண்டும். அதில் மாக் லொகேஷன்(Mock location) எனும் அமைப்பில் சென்று இந்த செயலிக்கான அனுமதியை வழங்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கியவுடன், செயலியில் வந்து, உங்களுக்கு விருப்பமான முகவரியை உள்ளிட வேண்டும். பின்பு show கொடுத்தால் போதும். மதுரையில் இருப்பவர் மேன்சிஸ்டர் சிட்டியில் இருப்பதாக காட்டும். கூகுள் மேப் கூட இந்த செயலி இடம் தோற்றுப் போய்விடும். ஆம் !கூகுள் மேப் செயலி உங்களுடைய உண்மையான இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் திணறும்.

மேலும் உங்களுடைய நண்பர்களுக்கு தற்போதைய இருப்பிடத்தை பகிரும்போது அவர்களுக்கும் இந்த போலி இருப்பிட முகவரிதான் காட்டும். ஆனால் இதை ஒருபோதும் தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த மேப்பு வசதிக்காக கட்டற்ற ஓபன் ஸ்ட்ரீட் மேப் தான் பயன்படுத்தப்படுகிறது.

நண்பர்களோடு விளையாடுவதற்கும் அத்தியாவசியமான சூழல்களில் மட்டும் உங்களுடைய இருப்பிடத்தை மாற்றி கூறுவதற்கு இந்த செயலியை பயன்படுத்துங்கள். மற்றபடி தேவையின்றி ஏமாற்று வேலைகளுக்காக இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம். மேலும், அனைத்து நேரங்களிலும் இதுபோன்ற சேவைகள் சரியாக செயல்படும் என்று சொல்ல முடியாது. எனவே அமெரிக்காவில் இருக்கிறேன்! என சொல்லிக் கொண்டிருக்கும் போதே பண்ணும் ஏமாற்று வேலை தெரிந்து செருப்படி வாங்கும் நிலை ஏற்படலாம்.

எனவே விளையாட்டுக்காக மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

App link : f-droid.org/en/packages/cl.coders.faketraveler/

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/fake-traveller-open-source-app/

#androidApps #androidOpensourceSeries #fakeTravellerApp

FakeTraveler | F-Droid - Free and Open Source Android App Repository

Fake your location

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் வரிசையில் பல்வேறு சுவாரசியமான சேவைகள் குறித்து பார்த்திருக்கிறோம். ஆனால், பல நண்பர்களும் விருப்பப்பட்டு கேட்கக்கூடிய செயலி என்னவென்றால், சமூக வலைதளங்கள் புகைப்படங்கள் மற்றும் குழு புகைப்படங்கள் என தங்கள் மொபைல் போனில் நிரம்பி வழியும் புகைப்படங்களில் விதவிதமாக edit செய்து பார்ப்பதற்கு ஏதாவது சிறந்த கட்டற்ற செயலி இருக்கிறதா? என்றுதான் கேட்கிறார்கள்.இந்தக் கேள்வியை நான் பலமுறை கடந்து வந்து விட்டேன்.

ஒரு சில கட்டற்ற செயலிகளை நான் பயன்படுத்தியும் பார்த்தேன்.ஆனால் அவற்றின் செயல் திறன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால் இன்றைக்கு என் எழுத இருக்கும் இந்த செயலி, புகைப்பட எடிட்டிங் வேலைகளையும் தாண்டி, பல்வேறு விதமான சிறப்பம்சங்களோடு உங்களுக்கு கிடைக்கிறது.

இந்த செயலியின் பெயர் இமேஜ் டூல் பாக்ஸ்(Image tool box). உண்மையிலேயே இந்த செயலி ஒரு டூல் பாக்ஸ் தான். புகைப்படத்தை பிடிஎப் ஆக(photo to pdf )மாற்ற வேண்டுமா? அதையும் இங்கு செய்யலாம். Qr கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டுமா? அதுவும் இங்கே செய்யலாம். புகைப்படங்களை விதவிதமாக எடிட் செய்ய வெட்ட, தைக்க , இணைக்க (crop,stitch,merge, colleague etc)என நீங்கள் விரும்பும் அனைத்து வேலைகளும் இங்கே நிறைவேறும்.

புகைப்படத்தின் அளவை குறைக்க வேண்டுமா?(Size reduction) புகைப்படத்தின் அகல நீளங்களை மாற்றி அமைக்க வேண்டுமா(crop)? புகைப்படத்தில் இருக்கும் தகவல்களை எடுக்க வேண்டுமா(word recognition)?

புகைப்படத்தில் இருக்கும் கணக்குகளை செய்து பார்க்க வேண்டுமா? என்னடா லிஸ்ட் பெருசா போகிறது என்று யோசிக்கிறீர்களா? மொத்தம் 66 விதமான image tools இங்கு உங்களுக்கு காண கிடைக்கிறது.

இந்த செயலி குறித்து ஒவ்வொன்றாக நான் விளக்குவதை விடவும்.அன்பு நண்பர்கள் இதை பதிவிறக்கி பயன்படுத்தி பார்த்தாலே நிச்சயம் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.

பெரும்பாலான புகைப்பட எடிட்டிங் செயலிகளில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், அவை கட்டற்ற முறையில் தயாரிக்கப்படுவதில்லை. குறிப்பாக, நீங்கள் ஒரு நம்பகமற்ற செயலியை நிறுவி அதில் புகைப்படங்களை எடிட் செய்யும்போது, உங்களுடைய மொபைல் போனில் அரசு ஆவணங்கள் போன்றவற்றை புகைப்படமாக எடுத்து வைத்திருந்தால் அவை வெளியில் கசியும் அபாயம் இருக்கிறது. மேலும், உங்களுடைய புகைப்படங்கள் திருடப்படும் பட்சத்தில் அவற்றை தவறாக சித்தரித்து மிரட்டும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இவை அனைத்தையும் கடந்து உங்களுக்கு நம்பகமில்லாத செயலிகளுக்கு புகைப்பட அனுமதியை கொடுப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்(Don’t allow image access if it doesn’t need). பெரும்பாலும் கட்டற்ற செயலிகளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள். புதியதாக வெளியாகியிருக்கும் அதிகமாக விளம்பரம் வரக்கூடிய செயலிகளை பயன்படுத்துவதை தவிருங்கள் .

சரி இந்த செயலியை எங்கப்பா நிறுவலாம்! என்று கேட்டால் வழக்கம்போல நம்முடைய Fdroid தளத்தில் இந்த செயலி உங்களுக்கு காணக் கிடைக்கும். நான் வழக்கமாக குறிப்பிடக்கூடிய செயலிகளை விடவும், இதன் அளவு சற்றே பெரியது சுமார் 100 எம் பி க்கும் சற்று அதிகமாக இதன் அளவு உள்ளது(app size 100mb). மேலும் தேவைப்படும் மொழி அமைப்புகள், சில கருவிகள் போன்றவற்றிற்காக மேற்கொண்டு விரும்புதல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

App link: f-droid.org/en/packages/ru.tech.imageresizershrinker/

இருந்தாலும் கூட, குறைந்த அளவு செயல் திறன் கொண்ட மொபைல் கருவிகளில் கூட இதை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செயலியில் பல்வேறு விதமான அமைப்புகளும் உங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய எடிட்டிங் திறமைகளை வெளிக்காட்ட, ஆகச்சிறந்த கட்டற்ற செயலியாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/opensource-photo-editing-app-in-tamil/

#Android #androidApps #androidOpensourceSeries #editingApps #FOSS #photoEditing

Image Toolbox | F-Droid - Free and Open Source Android App Repository

Edit, create & convert images with powerful AI — your all-in-one studio

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயல்கள் வரிசையில் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயல்கள் குறித்து மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நான் பார்த்ததிலேயே, என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஆர்வத்தை தூண்டிய ஒரு கட்டற்ற செயலி தான் Gcompris. கால் நூற்றாண்டு காலமாக இந்த செயலி இயங்கி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த செயலி பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கும் எளிமையாக உலக நுட்ப அறிவை அறிந்து கொள்வதற்கும், ஆகச் சிறந்த செயலியாக கட்டற்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நான் தற்போது எழுதி வரும் லாஜிக் கதவுகள் தொடர்பாக இந்த செயலியிலேயே சர்க்யூட் போட்டு பார்த்து விட முடியும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பம், வானியல், கோள்கள், நிறமாலைகள், வேதியியல் உள்ளிட்ட பலதரப்பட்ட அறிவியல் நுட்பங்களின் அடிப்படைகளை கூட இந்த செயலியின் மூலம் குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியும்.

மேலும், பொழுதுபோக்கிற்காகவும், அவர்களின் நுட்ப அறிவு வளர்க்கும் விதமாகவும் பல்வேறு விதமான விளையாட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. சில விளையாட்டுகளை பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவம் வைக்கப்பட்டு இருக்கிறது, அதே நேரம் பணம் கொடுத்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய பல செயலிகளை காட்டிலும் இதன் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது.

இந்த செயலியானது, பல்வேறு இந்திய மொழிகளில் கூட உங்களுக்கு கிடைக்கிறது .ஆனால், நான் கவனித்த பொழுது தற்பொழுது வரை இதன் தமிழ் பதிப்பு வெளியாகவில்லை கட்டற்ற தமிழ் நுட்ப ஆர்வலர்கள் இந்த செயலியில் விரைவில் தமிழ் மொழியை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். மற்றபடி நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் இந்த செயலியில் இடம்பெற்று இருக்கிறது. இந்த விளையாட்டுகளின் மூலம் குழந்தைகள் புதுப்புது விஷயங்களை எளிமையாக கற்றுக்கொள்வார்கள்.

உங்களுடைய குழந்தை பத்து வயதிற்கு உள்ளாக இருந்தால், இந்த செயலியை தினம் தூறும் ஒரு பத்தில் இருந்து 20 நிமிடம் பயன்படுத்த கொடுக்கலாம். ஆனால், என்னதான் இருந்தாலும் அதிக நேரம் மொபைல் கருவிகளை குழந்தைகளை பயன்படுத்த அனுமதிப்பது சரியாக இருக்காது.

இந்த செயலியை நான் பயன்படுத்திய என் அனுபவங்கள் அடங்கிய சில ஸ்கிரீன்ஷாட்களையும் கீழே வழங்கி இருக்கிறேன். இந்த செயலியானது உங்களுக்கு கட்டற்ற வகையில் F droid (also available in Play Store)தளத்தில் காணக் கிடைக்கிறது.

பெரியதாக உங்கள் மொபைல் போனில் இந்த செயலி இடத்தை அடைத்துக் கொள்வதுமில்லை. மேலும், இன்னபிற செயலிகளை போல குழந்தைகளின் கற்றல் திறன் தொடர்பான தகவல்களை சேகரித்து, அதன் மூலம் விளம்பரம் செய்யும் பிரச்சினைகள் எல்லாம் இங்கு உங்களுக்கு இல்லை. பிறகு ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே ! இன்றைய குழந்தைகளை நாளைய தலைமுறை விடிவெள்ளிகளாக மாற்ற இந்த கட்டற்ற செயலியை கொண்டு கற்பிக்க தொடங்குங்கள்.

செயலியின் இணைப்பு:f-droid.org/en/packages/net.gcompris.full/

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/gcompris-app-in-tamil/

#androidOpensourceSeries

GCompris | F-Droid - Free and Open Source Android App Repository

Multi-Activity Educational game for children 2 to 10

Google செயலிகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய செயலிகள் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதுவதாக முன்பே தெரிவித்திருந்தேன். மேலும், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு தலைப்புகளின் இணைப்பாக, குரோம் உலாவிக்கு(Chrome browser)மாற்றாக உங்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த கட்டற்ற உலாவி குறித்து தான் இன்றைக்கு பார்க்க வருகிறோம்.

அடிப்படையில் குரோம், மைக்ரோசாப்ட் உலாவி, சபாரி போன்ற பல்வேறு விதமான உலாவிகள்(Browser)நம் கருவிகளில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதில் ஃபயர் ஃபாக்ஸ்(Firefox)போன்ற கட்டற்ற உலாவிகளும் அடக்கம். இருந்த போதிலும், குரோம் உலாவியில் தான் மொபைல் கருவிகளுக்கு ஏற்றதாகவும் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் இருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.

Tor போன்ற தனிப்பட்ட தகவல்களை மிக நேர்த்தியாக பாதுகாக்க கூடிய கட்டற்ற உலாவிகளும் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. ஆனால் இந்த உலாவியானது, சாதாரணமாக பயன்படுத்துவதற்கு சற்றே கடினமானதாக இருக்கும்.

இது எல்லாவற்றிற்கும் மாற்றாக fdroid தளத்தில் உங்களுக்கு காணக் கிடைக்கக்கூடிய ஒரு எளிமையான உலாவி தான் foss browser.

முழுக்க,முழுக்க கட்டற்ற முறையில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த உலாவியானது அடிப்படையான அனைத்து வசதிகளையும் உங்களுக்கு வழங்குகிறது. இந்த உலாவியில் உள்நுழைய வேண்டும்(no need to login)என்கிற கட்டாயம் இல்லை. மேலும் இந்த உலகில் நான் பார்த்ததிலேயே ஒரு சுவாரசியமான அம்சம் இருக்கிறது. நீங்கள் தேடுபொறியில் ஒரு இணையதளம் குறித்து தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இணையதளத்தின் தேடுதல் முடிவுகள் காட்டப்பட்ட உடனேயே, அதன் கீழேயே அனானிமஸ் வியூ(anonymous view)எனும் அமைப்பும் காட்டப்படும். இதன் மூலம், அந்த இணையதளத்தை நீங்கள் திறக்கும் போது உங்களுடைய தகவல்கள் எதுவும் இன்றி, எப்படி குரோம் incognito செயல்படுகிறதோ, அதுபோலவே உங்களால் ஒரு இணையதளத்தை பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், குரோம் உலாவியை காட்டிலும் இந்த வசதி இதில் மிக மிக எளிமையாக இருக்கிறது. மேலும், ஒரு இணையதளத்தின் தகவல்களை அச்சுப்பிரதியாக(print page as well as save as pdf)மாற்ற வேண்டுமென்றால், அது சற்றே கடினமாக ஒன்றாகத்தான் இருக்கும். பல நேரங்களில் குரோம் உலாவில் திறக்கப்பட்ட தளங்களை அச்சு செய்வதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

ஆனால், இந்த உலாவியிலோ மிக மிக எளிமையாக உங்களால் அச்சு வசதியை பெற முடிகிறது. மேலும் தானாகவே இது விளம்பரங்களை பெரும்பாலும் குறைத்து விடுகிறது. எனவே அச்சு செய்யும்போது ஆங்காங்கே தேவையற்ற விளம்பர படங்கள் இடம் பெறாது. விளம்பரங்கள் இன்றி, தொல்லைகள் இன்றி, அமைதியாக நீங்கள் தேட நினைத்ததை தேடி இணையத்தில் உலாவுவதற்கு ஒரு அருமையான உலாவியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

என்னை பொறுத்த அளவிற்கு பயன்படுத்துவதற்கு மிக மிக எளிமையாகவே இருக்கிறது. நீங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டில் இருக்கும் யாரும் இந்த உலாவியை எளிமையாக பயன்படுத்த முடியும் அனைத்து கருவிகளிலும் பெரும்பாலும் இந்த உலாவியானது பொருந்தும். பெரும்பாலும் இடத்தையும் அடைத்துக் கொள்வதில்லை.

தேவையின்றி ஒரு இணையதளத்தில் தேடி உங்களுடைய தகவல்களை வைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப விளம்பரங்களை அனுப்பி பாடாய்படுத்தும் பிரச்சினைகள் எல்லாம் இந்த உலாவியில் உங்களுக்கு ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.

App link:f-droid.org/en/packages/de.baumann.browser/

இந்த உலாவியானது fdroid தளத்திலேயே உங்களுக்கு கிடைக்கிறது.சுமார் 50 mb அளவில் இருக்கும் இந்த உலாவியில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு கருவிகளில் சிறப்பாக செயல்படும்.

பிறகு ஏன் நண்பர்களே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக இந்த உலாவியை பயன்படுத்திப்பாருங்கள். மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/foss-browser-in-tamil/

#androidOpensourceSeries #browser #FOSS #googleAlternatives

FOSS Browser | F-Droid - Free and Open Source Android App Repository

A fully free (as in freedom) open source browser for Android.

தற்காலத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக விக்கிபீடியா விளங்குகிறது. விக்கிப்பீடியாவின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் கணியம் தளத்திலேயே காணக் கிடைக்கின்றன .

ஆனால், பலருக்கும் விக்கிப்பீடியாவிற்கான அதிகாரப்பூர்வ செயலியானது இருப்பது தெரிந்திருப்பதில்லை. பெரும்பாலும், இணையத்தில் தேடியே விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விரும்பிய கட்டுரைகளை பதிவு செய்து வைப்பது, தேடும் நேரத்திலேயே எவ்வித தாமதமும் இன்றி கட்டுரைகளைப் படிப்பதற்கும் இந்த ஆண்ட்ராய்டு செயலி பயன்படுகிறது.

மேலும், இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சில கட்டுரை திருத்தங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது போன்ற வேலைகளை கூட மேற்கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், அன்றாடம் உலக மக்களால் அதிகமாக வாசிக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள், தமிழில் அதிகமாக கவனிக்கப்படும் கட்டுரைகள் மற்றும் பல சுவாரசியமான வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

சுமார் 30 எம்பி அளவில் கிடைக்கக்கூடிய இந்த செயலியானது, உங்களுக்கு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகளின் தளமான fdroid தளத்தில் காணக் கிடைக்கிறது.

விக்கிபீடியாவை போன்ற அல்லது விக்கிபீடியாவின் அடிப்படையை பயன்படுத்தி இயங்கக்கூடிய, அங்கீகரிக்கப்படாத பல செயலிகளும் உங்களுக்கு இணையத்தில் காண கிடைக்கும்.

பெரும்பாலும் நம்பகமற்ற சூழலில் இருந்து கிடைக்கக்கூடிய இதுபோன்ற விக்கிபீடியா செயலிகளை பதிவிறக்க வேண்டாம்.

அதிகாரப்பூர்வ விக்கிபீடியா செயலி? என்பதை கவனித்து பதிவிறக்கவும். மேலும், இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் கட்டாயம் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும் எனும் அவசியமும் இல்லை. உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் எதுவும் திருடப்படாது என்றும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இந்த செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில்(Open source)வடிவம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே,0இந்த செயலியின் நம்பகத்தன்மை குறித்து எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. பிறகு என்ன? இவ்வளவு நாளும் தேடித் தேடி கட்டுரைகளைப் படித்தது போதும் இனிமேல் ஒரே கிளிக்கில், உங்களது விக்கிபீடியா செயலில் விருப்பமான விக்கிபீடியா கட்டுரைகளை படித்து மகிழுங்கள்.

பதிவிறக்க இணைப்பு:

f-droid.org/en/packages/org.wikipedia/

மீண்டும் ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/wikipedia-android-app/

#androidOpensourceSeries

Wikipedia | F-Droid - Free and Open Source Android App Repository

The official app for Wikipedia, the world’s largest source of information.

இந்தப் பகுதியில், பல்வேறு விதமான கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக பார்த்து வருகிறோம். பல்வேறு விதமான பாதுகாப்பு நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு காண கிடைக்கும்.

ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற செயலிகளின் மூலம் உங்களுடைய இருப்பிடம் மற்றும் சில முக்கியமான தகவல்கள் செயலியை தயாரித்தவர்களுக்கு தெரிந்து விடும். மேலும்,இத்தகைய செயலிகள் கட்டற்ற வகையில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு செயலியை நிறுவி விட்டு அதனாலேயே, பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகிறது.

ஆனால், இன்றைக்கு நான் குறிப்பிடப் போகிற பாதுகாப்பு செயலி முழுக்க முழுக்க கட்டற்ற வகை தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

“keep alive” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலியின் பயன்பாடு என்னவென்றால், உங்களுடைய மொபைல் கருவியானது குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு எவ்வித பயன்பாடு என்று இருந்தால், நீங்கள் வழங்கி இருக்கக்கூடிய பாதுகாப்பு எண்ணிற்கு குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகளை தானாகவே மேற்கொள்ளும். உதாரணமாக,நீங்கள் ஒரு காட்டுப் பகுதிக்கு செல்கிறீர்கள் அப்போது இந்த செயலியில் 15 நிமிடத்திற்கான டைமரை ஆன் செய்து வைத்து விட்டால், உங்களுடைய மொபைல் கருவியை நீங்கள் 15 நிமிடத்திற்கு மேல் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் வழங்கி இருக்கும் பாதுகாப்பு எண்ணிற்கு உங்கள் இருப்பிடம் தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும்,நீங்கள் விருப்பப்பட்டால் பாதுகாப்பு எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ளும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

தனியாக வெகு தூரம் பயணிப்பவர்கள் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலருக்கும் இந்த செயலி பயன்படும். தாமாகவே உங்களுடைய இருப்பிட தகவல்களை நம்பகமான பாதுகாப்பு எண்ணிற்கு பகிர்வதால், உங்களுடைய பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மேலும்,இது கட்டற்ற செயலி என்பதால் உங்களுடைய தகவல்கள் எதுவும் திருடப்படாது.

அடிப்படையில், இந்த செயலி எவ்வாறு வேலை செய்கிறது என்றால் உங்களுடைய மொபைல் கருவி குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செயல்படாமல் இருந்தால், நீங்கள் வழங்கி இருக்கக்கூடிய மொபைல் எண்ணிற்கு உங்கள் இருப்பிடத்துடன் கூடிய அனுப்புகிறது. இதன் மூலம், உங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று பிறர் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் தங்களுடைய மொபைல் கருவியில் இந்த செயலியை நிரூவி வைத்திருந்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உங்களுடைய மொபைல் பயன்பாடு இல்லாமல் இருந்தால், உங்களுடைய தந்தை அல்லது உறவினருக்கு உடனடியாக உங்கள் இருப்பிடம் தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு இருந்தாலும் கூட, இந்த குறுஞ்செய்தியை காவல்துறைக்கு பகிர்வதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை சரியாக கண்டறிந்து உங்களை காப்பாற்ற முடியும்.

மேலும், வயதான பெற்றோர், சிறுவயது குழந்தைகள் என அனைவர் கையில் இருக்கும் மொபைல் கருவிகளிலும் இந்த செயலி கண்டிப்பாக நிறுவப்பட்டு இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்று ஒருமுறை கற்றுக் கொண்டால் நிச்சயமாக பயனுள்ள செயலியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தனிப்பட்ட முறையில் இந்த செயலியின் பயன்பாடு குறித்து இரண்டு வாரங்கள் நான் பரிசோதித்து பார்த்தேன். அதற்குப் பின்பே இந்த கட்டுரையை எழுதுகிறேன். மேலும் நான் பயன்படுத்தி பார்த்த அனுபவங்களை உள்ளடக்கிய சில புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

இந்த செயலியானது fdroid தளத்தில் கிடைக்கிறது. அதற்கான இணைப்பையும் கீழே வழங்கியிருக்கிறேன்.

f-droid.org/en/packages/io.keepalive.android/

மற்றும் ஒரு பயனுள்ள கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : [email protected]
இணையம் :

ssktamil.wordpress.com

https://kaniyam.com/keep-alive-app-tamil/

#Android #androidOpensourceSeries

Keep Alive | F-Droid - Free and Open Source Android App Repository

Notify others if you haven't used your device in a given period of time