PM MODI ने उपराष्ट्रपति सीपी राधाकृष्णन को शुभकामनाएं दी - VR News Live
PM MODI प्रधानमंत्री (नरेन्द्र मोदी) ने अपने सोशल मीडिया के एक्स प्लेटफॉर्म पर पोस्ट कर सीपी राधाकृष्णन के शपथ ग्रहण समारोह की तस्वीरें साझा की और उनके सफल
VR News Live
CP Radhakrishna चुने गए भारत के नए उपराष्ट्रपति, कुल 452 वोट मिले - VR News Live
Sudershan Reddy vs CP Radhakrishna: जस्टिस बी. सुदर्शन रेड्डी vs सीपी राधाकृष्णन को देंगे चुनौती
VR News Live
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். தங்கர் 528 முதல் விருப்பு வாக்குகளையும் அல்வா 182 வாக்குகளையும் பெற்றார். பதினைந்து எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவை. தேர்தலில் 780 வாக்காளர்களில் 725 எம்பிக்கள் (92.94 சதவீதம்) மட்டுமே வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட தேர்தலில் ஆளும் என்.டி.ஏ.வுக்கு அமோக பெரும்பான்மை இருந்ததால், தன்கரின் தேர்தல் முன்கூட்டியே முடிவடைந்தது. இவர் நாட்டின் 14-வது குடியரசு துணைத்...
www.patrikai.comதிருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பின்னர் அதை நீக்கினார்
http://bit.ly/38bLHzM
#MVenkaiahNaidu #VicePresidentofIndia #Thiruvalluvar
காவி மற்றும் வெள்ளைநிற வள்ளுவர் படங்கள் போட்டு வெங்கையா நாயுடு வாழ்த்து
திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பின்னர் அதை நீக்கினார்.
திருவள்ளுவரை போற்றும் விதமாக பொங்கலின் இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கலான இன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பகிர்ந்தார். மேலும், தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
அவருடைய தமிழ் பதிவில், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. அறநெறி, மாண்புகள், தார்மீகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Remembering great Tamil Poet, philosopher and Saint, Thiruvalluvar on his Jayanti today.#Thirukkuṛaḷ, authored by him provides guidance to mankind on how to lead a noble life. #Thiruvalluvar #Tamil pic.twitter.com/YETwVVcUlr
— Vice President of India (@VPSecretariat) January 16, 2020

ஆங்கிலத்தில் பதிவிட்ட பதிவிற்கு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும், தமிழில் பதிவிட்ட பதிவில் வெள்ளை நிற உடை அணிந்து எவ்வித மத சாயமும் இல்லாமல் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தையும் வெங்கையா நாயுடு பகிர்ந்திருந்தார். ஆனால் சிலமணிநேரத்திற்குப் பிறகு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.
காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக பாஜகவினர் ஏற்கெனவே பகிர்ந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.