Webinar Series: The Architecture of Artificial Intelligence (செய்யறிவின் கட்டமைப்பு – வலையரங்குத் தொடர்)
செய்யறிவின் (AI) கட்டமைப்பு: தமிழில் 8 வார மெய்நிகர் பயிலரங்குத் தொடர்
தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர்.
பதிவு
பதிவு செய்யக் கட்டணம் இல்லை. சூம் ஊடாக பதிவுசெய்ய வேண்டும்.
utoronto.zoom.us/meeting/register/wEgPI_hkSM-h-XK8fMM2ug
மேலோட்டம்
இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம் அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விரிவான தமிழ் நூலைப் பின்பற்றி, நுட்ப ஆழமும் நடைமுறை அறிவும் இணைந்து இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இம்மாதிரிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிவதுடன், அவற்றை ஆங்கிலம் மற்றும் தமிழ் சூழல்களுக்கு ஏற்ப எவ்வாறு கட்டமைப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதையும் பங்கேற்பாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வர்.
வழங்குபவர்
முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம் அவர்கள், கருத்தியல் இயற்பியலையும் (Theoretical Physics) கற்கும் கருவியியலையும் இணைத்த ஒரு தனித்துவமான பார்வையை முன்வைக்கிறார். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சிக்கலான அமைப்புகள் (Complex Systems) மற்றும் இயல் மொழி தெளிதல் (NLP) சார்ந்த தனது நிபுணத்துவத்தை, ‘சாமா’ (Saama Technologies) நிறுவனத்தின் ஊடாக மருத்துவத் துறையில் செயல்படுத்தி வருகிறார். தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இவர், தமிழைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் தனது தொழில்சார் திறன்களையும் தனிப்பட்ட இலட்சியத்தையும் ஒன்றிணைத்து, தமிழ் மொழிக்கான புதிய மொழி மாதிரிகளை (Language Models) உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பயனாளர்கள்
- மாணவர்கள்: கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்கள்.
- நுட்ப ஆர்வலர்கள்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் தடம் பதிக்க விரும்பும் எவரும்.
- கல்வியாளர்கள்: செயற்கை நுண்ணறிவுக் கருத்துக்களையும் கருவிகளையும் தங்களது பாடத்திட்டத்தில் இணைக்க விரும்பும் ஆசிரியர்கள்.
அமர்வு வடிவம் (90 நிமிடங்கள் – சனிக்கிழமை தோறும்)
- 45 நிமிடங்கள்: கருத்தியல் விளக்கம் – தமிழில் (செ.நு கட்டமைப்புக் கோட்பாடு, காட்சி தர்க்கம், மற்றும் வரலாறு)
- 45 நிமிடங்கள்: வழிகாட்டப்பட்ட கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில்.
கால அட்டவணை
திகதிகள்: March 21 – May 9, 2026
நாள்: ஒவ்வொரு சனிக்கிழமையும் (8 அமர்வுகள்)
நேரம்: 6:30 பிப – 8:00 பிப (சென்னை/இலங்கை); 9:00 முப – 10:30 முப (ரொறன்ரோ)
தொடர்பு
பங்களிப்பாளர்கள்
- கணியம் அறக்கட்டளை
- ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகம் – எண்ணிமத் தமிழியல்
- மொழித் தொழில்நுட்பக் குழு, கணனி விஞ்ஞானத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- தகமை – தமிழ்க் கணிமை மையம்
- தமிழறிதம்
பதிவு செய்ய: uoft.me/ai-tamil-webinar
தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர். இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம் அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விரிவான தமிழ் நூலைப் பின்பற்றி, நுட்ப ஆழமும் நடைமுறை அறிவும் இணைந்து இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இம்மாதிரிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிவதுடன், அவற்றை ஆங்கிலம் மற்றும் தமிழ் சூழல்களுக்கு ஏற்ப எவ்வாறு கட்டமைப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதையும் பங்கேற்பாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வர்.
A Weekly 8-Session Educational Series on AI, NLP, and Generative Models (Presented in Tamil)
Register here: uoft.me/ai-tamil-webinar
This webinar series is designed to take students and enthusiasts from the foundational logic of Artificial Intelligence to the cutting-edge operationalization of Large Language Models (LLMs). Drawing its curriculum from the comprehensive Artificial Intelligence book by Dr. Tamil Arasan Bakthavatchalam, these Tamil-language sessions will blend technical depth with practical intuition. This ensures participants understand not just how these models work, but how to build, align, and interact with them using both English and Tamil contexts.









