வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், 23,409 பேர் குணமடைந்து உள்ளனர்.18,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 397 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகொரோனா தடுப்பு பணிக்கு 2ஆயிரம் செவிலியர்கள் நியமனம்! பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் 2000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வழங்கினார். கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக புதிதாக 2 ஆயிரம் செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. அவர்களில் 2ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்க இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து தமிழகஅரசு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஅதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என திமுகதலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்! இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை தமிழக முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உளளார். இதுகுறித்து அவர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonபீலா ராஜேஷ் மாற்றம் மாபெரும் இழப்பு : ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கருத்து
சென்னை சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் கூறி உள்ளார் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று வணிகவரித்துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த பதவி வகித்தவர் ஆவார். இவர் வருவாய் நிர்வாக ஆணையர் பதவியையும் கவனிக்க உள்ளார். தமிழக மக்களிடையே இடையே...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க கூட்டு முயற்சி
சென்னை தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஒரு கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை. இதனால் உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசியைக் கண்டறியத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அதே முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்துடன் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்துள்ளது. இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து கூட்டு முயற்சியில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிய முடிவு செய்துள்ளன.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon