
தீர்மானம் நிறைவேறியது: சேது சமுத்திர திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் பேசியது என்ன?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்மானம் நிறைவேற்றியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டதிற்காக தீர்மானத்தை கொண்டுவந்தார். அவர் அந்த தீர்மானம் பற்றி கூறுகையில், சேது சமுத்திர திட்டம் எதற்காக கொன்டு வரப்பட்டது. நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது, தற்போதைய நிலை என்ன என பல விஷயங்களை குறிப்பிட்டார்....
www.patrikai.com
திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும்! சபாநாயகர் அப்பாவு….
சென்னை; ஆளுநர் உரையின்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையின்போது நடந்த அசாதாரண சம்பவங்கள் குறித்து அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் விதிகளுக்கு உள்பட்டுதான் எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என்றும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக ...
www.patrikai.com
ஆளுநருடன் வந்த விருந்தினர்மீது உரிமை மீறல்! சபாநாயகர் அப்பாவு தகவல்..
சென்னை: ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சட்டப்பேரவைக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஆளுநருடன் அவைக்கு வந்திருந்த ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பேசுகையில், ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை...
www.patrikai.com
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வழங்கும் உரையை மாற்றாமல் படிப்பதுதான் நாகரிகமும், மரபும் ஆகும்! அன்புமணி ராமதாஸ்…
சென்னை: அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசு வழங்கும் உரையை மாற்றாமல் படிப்பதுதான் நாகரிகமும், மரபு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும், திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகளை தவிர்த்து விட்டார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் இருக்கும்போதே அவரது உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...
www.patrikai.com
திராவிட மாடல் விவகாரம்: ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் – வெளிநடப்பு செய்த கவர்னர் ரவி…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், திராவிடம் என்ற வார்த்தைகளை பேசாமல் தவிர்த்த நிலையில், அதற்கு, எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இடையிலேயே கவர்னர் ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் சபையில், கவர்னர் எதிரான வந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷமிட்ட எம்எல்ஏக்களை தடுக்க வேண்டிய சபாநாயகர் அமைதியாக இருந்தார்....
www.patrikai.com