சினிமாவில் புதிய படைப்பை உருவாக்க முயற்சிக்கும் வாரிசுகள்…..!

நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் , இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், நடிகர் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய்,ஆகியோர் மிகவும் நெருக்கமான நண்பர்கள். கொரோனா ஊரடங்கு காலத்திலும் நட்புக்கு இடைவெளி விழுந்துவிடக் கூடாது என ‘ஜூம்’ உள்ளிட்ட தளங்கள் மூலமாக வாரம் 2 முறை ஆன்லைனில் சந்தித்து பேசி வருகின்றனர். மிக விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படைப்பு ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

patrikai.com

தந்தையுடன் வீடியோ கேம் விளையாடும் விஜயின் மகன் சஞ்சய் விஜய்....!

https://www.patrikai.com/jason-sanjay-picture-goes-viral/ @[email protected] #sanjayvijay #gameplaying #viral

தந்தையுடன் வீடியோ கேம் விளையாடும் விஜயின் மகன் சஞ்சய் விஜய்….!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். நிகழ்ச்சி தொகுப்பாளராக சமீபத்தில் உருவெடுத்த சஞ்சய் சில நாட்கள் கழித்து Siri எனும் குறும்படத்தை இயக்கி நடித்தார். இந்நிலையில் சஞ்சய் விஜய் வீடியோ கேம்ஸ் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தையுடன் அவர் கேம்ஸ் விளையாடும் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.  

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon