
முதலமைச்சர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு திடீரென ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், அவரது மதுரை பசும்பொன் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பசும்பொன்னில் நாளை நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் வகையில் இவர் இன்று மதுரை செல்வதாக அறிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை காலை, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்றும் தொடர்ந்து மருபாண்டியர் சிலைக்கும் மரியாதை செய்துவிட்டு பசும்பொன் சென்று தேவர் சமாதியில்...
www.patrikai.com
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள 29ந்தேதி மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ளும் வகையில் நாளை மறுதினம் (29ந்தேதி) மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தொடர்ந்து 30ந்தேதி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக்டோபர் 30ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற...
www.patrikai.com
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெறுவதில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கிடையே மோதல் நீடித்தநிலையில், அந்த தங்கக்கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அப்பொழுது கமுதி அருகே உள்ள தேவர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டதங்க கவசம் பொருத்தப்படுவது வழக்கமான நடைமுறை. இதற்காக, மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின்...
www.patrikai.com
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினம்: விதிகளை மீறக்கூடாது என மதுரை எஸ்.பி. கடும் எச்சரிக்கை
மதுரை: தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி, அவர்களின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை எஸ்.பி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இதையட்டி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த சமுதாய மக்கள், காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு கார் மற்றும் வாகனங்களில் சென்று மரியாதை செய்வார்கள். இந்த நாட்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால்...
www.patrikai.com
தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை தவிர்க்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்த செல்வதை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சமாதியில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு...
www.patrikai.com
ஆர்.எஸ்.எஸ். தலைவரை வணங்கினாரா பசும்பொன் முத்துராமலிங்கனார் ?: பொய் அம்பலம்!
YouTube