சொல்லும் எழுத்தும்
இது பற்றி விரிவாக எழுத வேண்டும். இப்படி சொன்னால், நீங்கள்தான் இது பற்றி மேலதிக விபரங்களைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பொருள்.
அட்லாண்டிக் கட்டுரை ஒன்றில் டெரெக் தாம்ஸன், எல்லாவற்றை உரையாடல் தன்மையைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என்கிறார். இணையத்தில், குறிப்பாக சமூக ஊடகங்களில் நிகழ்வது உரையாடல், இது எழுத்துக்கு எதிரிடையானது என்கிறார். நான் இங்கு பகிர்வது அதற்காக அல்ல, எழுத்து எப்படி சிந்தனையை உயர்த்துகிறது என்று அவர் எழுதுவது யோசிக்கத்தக்கது.
#literacy #oralCulture #socialMedia
