நடிகை மீரா மிதுன் போலீசுக்கு பயந்து பதுங்கினார்… விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை… https://patrikai.com/meera-mithun-abscond-police-says-in-court/ via @[email protected]
நடிகை மீரா மிதுன் போலீசுக்கு பயந்து பதுங்கினார்… விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை…
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை அமைர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மீரா மிதுனை விரைவில் கண்டுபிடித்து ஆஜர்படுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. கடந்த 6 ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது...