மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல் https://patrikai.com/35000-acres-of-agricultural-land-affected-by-cyclone-mandus-58-lakh-metric-tonnes-of-paddy-procured-minister-chakrapani-informs/ via @[email protected]

#MandousCyclone #DeltaDistrict #Agriculture #Paddy #Procurement @[email protected]

மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது.  பின்னர் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை...

www.patrikai.com

#மாண்டஸ்புயல் பாதிப்பு: #சென்னை யில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…
https://patrikai.com/cyclone-mandous-death-toll-rises-to-5-in-chennai/ via @[email protected]

#Mandous #MandousCyclone #CycloneMandous #ChennaiRains #Chennai #DeathToll

மாண்டஸ் புயல் பாதிப்பு: சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால், சென்னை உள்பட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து பகுதிகளும் இருளில்...

www.patrikai.com

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
https://patrikai.com/quick-relief-for-kasimedu-boats-affected-by-cyclone-mandous-minister-kkssr/ via @[email protected]

#Mandous #MandousCyclone #CycloneMandous #kasimedu #damaged #fishing #boats #Relief @[email protected]

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக,  சென்னை காசிமேட்டில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகுகள் கடும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், புயல் காரணமாக பாதிக்கப்படைந்துள்ள  படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார். சென்னை காசிமேட்டில் புயல் காற்றால் 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில்...

www.patrikai.com

16மணி நேரத்தில் பல்டி: சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என அறிவிப்பு…
https://patrikai.com/baldi-in-16-hours-buses-will-run-as-usual-tonight-in-all-district-including-chennai/ via @[email protected]

#Mandous #MandousCyclone #CycloneMandous #Cyclone #publictransport #Chennai @[email protected]

16மணி நேரத்தில் பல்டி: சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என அறிவிப்பு…

சென்னை: இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயங்காது என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பேருந்துகள் சேவை நிறுத்தப்படாது., வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவித்து உள்ளது. அதுபோல் ஆம்னி பேருந்து சேவை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ்புயல் சென்னை...

www.patrikai.com

மாண்டஸ் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
https://patrikai.com/mandous-storm-imd-warns-red-alert-for-3-districts-orange-alert-for-8-districts-yellow-alert-for-16-districts-in-tamilnadu/ via @[email protected]

#Mandous #MandousCyclone #CycloneMandous #Cyclone #RedAlert #OrangeAlert #YellowAlert @[email protected] @[email protected]

மாண்டஸ் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை: சீறி வரும் மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளத. அதன்படி,  3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும்,  8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும்,  16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும்  விடுக்கப்பட்டுள்ளது... வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல்  மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்...

www.patrikai.com
மாண்டஸ் புயல்: கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை – சென்னையில் 2 நாள் மழை! பாலச்சந்திரன் தகவல்

சென்னை:  மாண்டஸ் புயல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்,  கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்  என கூறினார். மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில்...

www.patrikai.com

மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட், நாளை மறுதினம் ஆரஞ்சு அலர்ட்… https://patrikai.com/approaching-cyclone-mandus-tomorrow-red-alert-day-after-tomorrow-orange-alert-in-chennai-and-puducherry/ via @[email protected]

#CycloneMandous #CycloneAlert #MandousCyclone #RedAlert #coastal #TamilNadu #Chennai #Pondicherry #Puducherry @[email protected] @[email protected]

மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட், நாளை மறுதினம் ஆரஞ்சு அலர்ட்…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுதினம் (10ந்தேதி) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில்  மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல்  காரைக்காலில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ளது. இது தற்போது, மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாளை...

www.patrikai.com

770 கி.மீ தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருகிறது…! வானிலை ஆய்வு மையம் தகவல் https://patrikai.com/a-deep-depression-approaching-chennai-meteorological-center-information/

#MandousCYCLONE #CycloneMandous #cyclone #warning #Chennai #Coastal #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

770 கி.மீ தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருகிறது…! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும் என்றும் அதன்காரணமாக,  மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

www.patrikai.com

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு…
https://patrikai.com/be-prepared-to-face-heavy-rain-chennai-corporation-orders-to-the-officials/ via @[email protected]

#HeavyRain #warning #coastal #TamilNadu #Chennai #ChennaiRain #CycloneMandous #MandousCYCLONE @[email protected] @[email protected] @[email protected]

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை:  கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பேரிடர்மீட்பு துறையினர் மாவட்டங்களுக்கு சென்று முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை...

www.patrikai.com

மாண்டஸ் எச்சரிக்கை: சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… https://patrikai.com/mandus-alert-number-1-storm-warning-cage-hoisted-in-many-ports-including-chennai/ via @[email protected]

#CycloneMandous #Mandous #MandousCYCLONE #Cyclones #Chennai #Harbour #warning @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மாண்டஸ் எச்சரிக்கை: சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: மாண்டஸ் [புயல் எச்சரிக்கை எதிரொலியாக,  சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. இந்த புயலால் சூறாவளி காற்றும் வீசும் என்பதால்,  மீனவர்கள்...

www.patrikai.com